No products in the cart.

தினம் ஓர் ஊர் – சுந்தரபாண்டியம் (Sundarapandiam) – 15/01/25
தினம் ஓர் ஊர் – சுந்தரபாண்டியம் (Sundarapandiam)
மாவட்டம் – விருதுநகர்
வட்டம் – வத்ராப்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 8547
கல்வியறிவு – 60%
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L. Pitchi (I.P.S)
District Revenue Officer – Bro. R Rajendran (Virudhunagar)
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – ஸ்ரீவில்லிபுத்தூர்
மக்களவை உறுப்பினர் – Sis. Rani Srikumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. E.M.Manraj (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. M.Sugandhi (Virudhunagar)
நகராட்சி தலைவர் – Bro. R.Madhavan (Virudhunagar)
நகராட்சி துணை தலைவர் – Sis. T.Dhanalakshmi
Principal District Judge – Bro. K.Jeyakumar
ஜெபிப்போம்
சுந்தரபாண்டியம் (Sundarapandiam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில் – வத்திராயிருப்பு செல்லும் சாலையில் உள்ளது.
சுந்தரபாண்டியம் அர்ஜுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த இடத்தைச் சுற்றி செங்குளம், பெரியகுளம், கரிசல்குளம் என பல சிறிய ஏரிகள் (கண்மாய்) அமைந்துள்ளன. குடிநீரின் முக்கிய ஆதாரம் நிலத்தடியில் எடுக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு கிளை இந்த கிராமத்திற்கு தெற்கே அமைந்துள்ளது மற்றும் இது பொதுவாக தெற்கு மலை (தெற்கு மலை) என்று அழைக்கப்படுகிறது.
இது 16 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Sis. M.Sugandhi அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Madhavan அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. T.Dhanalakshmi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களையும், இவர்கள் செய்கிற பணிகளையும் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
சுந்தரபாண்டியம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. E.M.Manraj அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Rani Srikumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
சுந்தரபாண்டியம் பேரூராட்சி 8,513 மக்கள்தொகை கொண்டது. மக்கள் தொகையில் 50% ஆண்கள் மற்றும் 50% பெண்கள். சுந்தரபாண்டியம் மக்கள் தொகையில் 8% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். இப்பேரூராட்சியில் மொத்தம் 2,562 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில் நெசவு மற்றும் விவசாயமாகும்.
சுந்தரபாண்டியத்தின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% விட அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இப்பேரூராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி, யூனியன் தொடக்கப்பள்ளி, விவேகா பள்ளி (ஆங்கில மீடியம்), சாலியர் தொடக்கப்பள்ளிஇ சித்தி விநாயகர் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் உள்ளன.
சுந்தரபாண்டியம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் நெசவு மற்றும் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். சுந்தரபாண்டியம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.