No products in the cart.
தினம் ஓர் ஊர் – சிவகாசி – 30/06/23
தினம் ஓர் ஊர் – சிவகாசி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
மக்கள் தொகை – 4,26,753
கல்வியறிவு – 88.28%
மக்களவைத் தொகுதி – விருதுநகர்
சட்டமன்றத் தொகுதி – சிவகாசி
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
துணை ஆட்சியர் – Bro. Birathiviraj (I.A.S)
Deputy Superintendent of Police – Bro. A.Chandrasekaran (I.P.S) (Virudhunagar)
Deputy Superintendent of Police – Bro. L.Pitchi (Sivakasi)
District Revenue Officer – Bro. J.Ravikumar (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. B.Manickam Tagore (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A.M.S.G.Ashokan (MLA)
மாநகராட்சி ஆணையர் – Bro. N.Sankaran
மேயர் – Sis. Sangeetha
துணை மேயர் – Sis. K.Vignesh Priya
வருவாய்துறை ஆணையர் – Bro. R.Saravanan
Additional District and Sessions Judge – Bro. T.V.Hemanandakumar
District Munisf Judge – Sis. T.Bharathi
Subordinate Judge – Bro. S.Murugavel
ஜெபிப்போம்
சிவகாசி (Sivakasi), என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி ஆகும். சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு, சிவகாசி நகராட்சி 24 ஆகஸ்ட் 2021 அன்று தமிழ்நாடு மாநிலத்தின், 21-ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசி மாநகராட்சிக்காக ஜெபிப்போம்.
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. சிவகாசியானது பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடும் தொழில்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்துறை நகரம். இதற்காக ஜெபிப்போம்.
தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது.
சிவகாசி நகராட்சி 1920 இல் நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சிவகாசி மெட்ராஸ் (தற்போது சென்னை) மாநிலத்தின் கீழ் ஒரு நகராட்சியாகவும், பின்னர் 1953, 1956 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் மொழியியல் ரீதியாக பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவும் தொடர்ந்தது. பின்னர் 1968 இல் மறுபெயரிடப்பட்டது. பின்னர் 1978 இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1978 இல் முதல் நிலை நகராட்சியாகவும், 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013ல் நிர்வாகத் தலைமையிட சிறப்பு நிலை நகராட்சியாகவும் , 24 ஆகஸ்ட் 2021ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசி மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A.M.S.G.Ashokan அவர்களுக்காகவும், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. B.Manickam Tagore அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. A.Chandrasekaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
சிவகாசி மாநகராட்சி தற்போது 48 வார்டுகளைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மாநகராட்சியின் மேயர் Sis. Sangeetha அவர்களுக்காகவும், துணை மேயர் Sis. K.Vignesh Priya அவர்களுக்காகவும், மாநகராட்சி ஆணையர் Bro. N.Sankaran அவர்களுக்காகவும், வருவாய்துறை ஆணையர் Bro. R.Saravanan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
சிவகாசி நகரமானது மூன்று முக்கிய தொழில்களைச் சார்ந்துள்ளது: பட்டாசுகள், தீப்பெட்டி உற்பத்தி மற்றும் அச்சிடுதல் போன்றவையாகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டிகள் ஏறத்தாழ 70% சிவகாசியிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்த நகரம் தினக்குறிப்புப்புத்தகம் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த தினக்குறிப்புப்புத்தகம் 30% இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
இந்த நகரத்தில் 520 பதிவு செய்யப்பட்ட அச்சிடும் தொழில்கள், 53 தீப்பெட்டி தொழிற்சாலைகள், 32 இரசாயன தொழிற்சாலைகள், ஏழு சோடா தொழிற்சாலைகள், நான்கு மாவு ஆலைகள் மற்றும் இரண்டு அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இந்த நகரம் தேசிய அளவில் பட்டாசு உற்பத்திக்கான ஒரு முக்கிய நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்.
இந்நகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக, தனியார் பள்ளிகளுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காக, ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம். இங்கு இருக்கும் சிவகாசி இந்து நாடார் உறவின் முறை விக்டோரியா பள்ளிகள் மிகவும் பழமையானதாகும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்நகரத்தில் இரண்டு பொறியியல் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் மெப்கோ பொறியியல் கல்லூரி முக்கியமானது. மேலும் எச். எப். ஆர் என்னும் மகளிர் கல்லூரியானது, இந்நகரத்தில் பெண்கள் படிப்பதற்கு முக்கிய கல்லூரியாக உள்ளது. இந்த மாநகராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக, கல்லூரிகளுக்காக ஜெபிப்போம்.
சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 4,26,753 மக்கள் இருக்கிறார்கள். அதில் ஆண்கள் 2,11,880 பேரும், பெண்கள் 2,14,873 பேரும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 37.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 1,17,312 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.28% சதவீதமும், இசுலாமியர்கள் 2.24% சதவீதமும், கிறித்தவர்கள் 4.2% சதவீதமும் மற்றும் பிற மதத்தை சார்ந்தவர்கள் 0.27% சதவீதம் பேர் இருக்கிறார்கள். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். சிவகாசி மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். குடும்பங்களின் சமாதானத்திற்காக ஜெபிப்போம்.