Daily Updates

தினம் ஓர் ஊர் – சாத்தூர் – 01/07/23

தினம் ஓர் ஊர் – சாத்தூர்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
மக்கள் தொகை – 1,68,607
கல்வியறிவு – 78.85%
மக்களவைத் தொகுதி – விருதுநகர்
சட்டமன்றத் தொகுதி – சாத்தூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
Deputy Superintendent of Police – Bro. A.Chandrasekaran (I.P.S) (Virudhunagar)
Deputy Superintendent of Police – Bro. V.M.Shahul Hameed (Sattur)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. A.Chandrasekaran (I.P.S)
District Revenue Officer – Bro. J.Ravikumar (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. B.Manickam Tagore (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A.R.R. Raghuraman (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. M.Elavarasan
நகராட்சி தலைவர் – Bro. S.Gurusamy
நகராட்சி துணை தலைவர் – Bro. P.Ashok
District Revenue Inspector – Bro. S.Sakthivel
Additional District and Sessions Judge – Bro. T.V.Hemanandakumar
Judicial Magistrate Judge – Sis. S.P.Kavitha
District Munsif cum Judicial Magistrate – Sis. P.Anuradha
Subordinate Judge – Bro. C.Sankar

ஜெபிப்போம்

சாத்தூர் (Sattur), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். சாத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 53 வருவாய் கிராமங்கள் உள்ளன. சாத்தூர் நகராட்சிக்காக ஜெபிப்போம்.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A.R.R. Raghuraman அவர்களுக்காகவும், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. B.Manickam Tagore அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. A.Chandrasekaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

சாத்தூர் நகராட்சி ஆணையர் Bro. M.Elavarasan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. S.Gurusamy அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Bro. P.Ashok அவர்களுக்காகவும், வருவாய்துறை ஆணையர் Bro. S.Sakthivel அவர்களுக்காகவும், சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் Bro. V.M.Shahul Hameed அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்ய கர்த்தர் கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம்.

சாத்தூர் நகராட்சி 24 வார்டு உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். கர்த்தருடைய வழிநடத்துதல் அவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட ஜெபிப்போம்.

சாத்தூரில் மொத்தம் 1,68,607 மக்கள் இருக்கிறார்கள். இதில் 83,151 ஆண்களும், 85,456 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 60.7% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.81% பேரும், இசுலாமியர்கள் 1.4% பேரும், கிறித்தவர்கள் 3.66% பேரும் மற்றும் பிற மதத்தை சார்ந்தவர்கள் 0.03% ஆக உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 47,891 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய ஆளுகை இறங்கும்படி ஜெபிப்போம்.

சாத்தூர் ஒரு நீரூற்று-பேனா நிப், எஃகு உருட்டல் ஆலைகள் மற்றும் நாக்கு துப்புரவாளர் உற்பத்தி மையம் என நன்கு அறியப்பட்டதாகும். குடிசைத் தொழிலாக இந்த வணிகத்தில் இன்றுவரை தொடரும் ஒரே இடம் இதுவே. இந்தத் தொழில்கள் தனிநபர்களால் சிறு அளவிலான குடும்ப வணிகங்களாக நடத்தப்படுகின்றன. அச்சு இயந்திரம் , பட்டாசு மற்றும் தீப்பெட்டி / தீப்பெட்டி போன்ற பிற சிறிய அளவிலான குடிசை அலகுகள்தொழில்களும் உள்ளன.. துருப்பிடிக்காத எஃகு நாக்கு துப்புரவாளர் மற்றொரு முக்கியமான தயாரிப்பு ஆகும், இது இங்கு தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது. பெரும் பகுதியினர் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சாத்தூரில் உள்ள தொழில்களுக்காக ஜெபிப்போம். அந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

சாத்தூரில் தயாரிக்கப்படும் காரச்சேவு மிகவும் பிரசத்தி பெற்றது. இங்குள்ள நீர், விளையும் மிளகாய் வற்றல், தயாரிப்புமுறையால் கிடைக்கும் ருசிக்காக இச்சேவு அறியப்படுகிறது. இந்த தொழில் செய்யும் வியாபாரிகளுக்காக அவர்களின் தொழிலை ஆசீர்வதித்து வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.

சாத்தூரில் உள்ள பள்ளிகளுக்காக, கல்லூரிகளுக்காக, படிக்கின்ற பிள்ளைகளுக்காக, ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்காக, பணிபுரியும் மருத்துவர்களுக்காக, செவிலியர்களுக்காக, மருத்துவமனை ஊழியர்களுக்காக ஜெபிப்போம். தனியார் மற்றும் அரசு அலுவலங்களில் வேலை செய்பவர்களுக்காக ஜெபிப்போம். சாத்தூர் பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் தேவனுடைய வார்த்தை விதைக்கப்படவும், அதன்மூலம் அநேக தேவபிள்ளைகளை கர்த்தர் எழுப்பி தரவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.