Daily Updates

தினம் ஓர் ஊர்-சின்னாளப்பட்டி (Chinnalapatti) – 06/04/25

 

தினம் ஓர் ஊர்-சின்னாளப்பட்டி (Chinnalapatti)

வட்டம்-ஆத்தூர்

மாவட்டம்-திண்டுக்கல்

மாநிலம்-தமிழ்நாடு

மொத்த பரப்பளவு-4.25 சதுர கிலோமீட்டர்கள் (1.64 sq mi)

மக்கள் தொகை-26,285

கல்வியறிவு-87.06%

மக்களவைத் தொகுதி-திண்டுக்கல்

சட்டமன்றத் தொகுதி-ஆத்தூர்

District Collector -Bro.S. Saravanan, IAS

District Revenue Officer -Sis. R.Jeyabharathi

Superintendent of PoliceRevenue -Dr.A.Pradeep IPS

PRINCIPAL DISTRICT AND

SESSIONS JUDGE -Sis. A.MUTHU SARATHA

District Munsif -cum- Judicial Magistrate -Bro. P.JAISANKAR (Aathoor)

ஜெபிப்போம்

சின்னாளப்பட்டி (Chinnalapatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஓர் பேரூராட்சி ஆகும். சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் சின்னாளப்பட்டியில் நெய்யப்படுகின்றன. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வளாகம் இவ்வூரின் அருகாமையில் உள்ளது.

சின்னாளபட்டி நகரம் 18 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த சின்னாளப்பட்டி பேரூராட்சி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

சின்னாளபட்டி பேரூராட்சியின் மக்கள் தொகை 26,285 ஆகும், இதில் 12,935 ஆண்கள் மற்றும் 13,350 பெண்கள் உள்ளனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 2237 ஆகும். சின்னாளபட்டியில், ஆண்களின் கல்வியறிவு விகிதம் சுமார் 93.12% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 81.23% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியில் 6,981 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 96.59%, முஸ்லீம் 0.72%, கிறிஸ்தவர் 2.48% மற்றும் சீக்கியர் 0.04% உள்ளனர்.

சின்னாளப்பட்டி சுங்குடி சேலை என்பது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தயாரிக்கப்படும் சேலை ரகமாகும். பிரபலமாக சின்னல பட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் சுங்குடி புடவைகள் பாரம்பரிய வழியில் செய்யப்படுகின்றன. தென்னிந்தியாவில் சின்னாளப்பட்டு புடவைகள் நன்கு அறியப்பட்டவையாக உள்ளன. இந்த நகரத்தில் சிங்கிள், டபுள்கலர், முடிச்சு, கல்கட்டா, கைபுட்டா என பல்வேறு வகைகளில் சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.

மொத்த மக்கள் தொகையில், 11,384 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 7,732 பேர் ஆண்கள், 3,652 பேர் பெண்கள். மொத்த 11384 உழைக்கும் மக்களில், 91.22% பேர் முக்கிய வேலையிலும், 8.78% பேர் மொத்த தொழிலாளர்களில் விளிம்புநிலை வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.

சின்னாளப்பட்டி பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். சின்னாளப்பட்டி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். சின்னாளப்பட்டி பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள நெசவாளர் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். சின்னாளப்பட்டி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.