No products in the cart.

தினம் ஓர் ஊர் – சாயல்குடி (Sayalgudi) – 27/03/25
தினம் ஓர் ஊர் – சாயல்குடி (Sayalgudi)
மாவட்டம் – இராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
பரப்பளவு – 12.20 சதுர கிலோமீட்டர்கள் (4.71 sq mi)
மக்கள் தொகை – 14,801
கல்வியறிவு – 68%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – முதுகுளத்தூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Simranjeet Singh Kahlon I.A.S.
Superintendent of Police – Bro. G.Chandeesh I.P.S.
Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,
Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.,
District Revenue Officer – Bro. R. Govindarajalu
Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)
ஜெபிப்போம்
சாயல்குடி (Sayalgudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரம் ஆகும். சாயல்குடி பேரூராட்சி கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் அமைந்துள்ளது.
இது இராமநாதபுரத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 50 கிமீ தொலைவிலும் உள்ளது.இங்கு இருந்து 5 கிமீ தொலைவில் கடற்கரை உள்ளது. இது இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சாயல்குடி ஜமீன் ஆட்சி செய்த பகுதியாகும்.
இந்த பேரூராட்சி 3,617 வீடுகளும், 14,801 மக்கள்தொகையும் கொண்டது. இது 12.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 53 தெருக்களும் கொண்ட சாயல்குடி பேரூராட்சியானது முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்காலைகள் அமைந்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்த இரும்பாலைகளின் உருக்குலைந்த பகுதிகள் கிடைக்கப்பட்டுள்ளன. இரும்புத்தாது, உடைந்த பானையின் ஓடுகள், குறியீடுள்ள பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன தாய்த் தெய்வ பொம்மை, கெண்டியின் மூக்குப்பகுதி என பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
சாயல்குடி பேரூராட்சி கன்னியாகுமரி நோக்கி கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ளது. இது பல சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது மற்றும் மக்களுக்கு சந்தையாக செயல்படுகிறது. சாயல்குடியின் சராசரி கல்வியறிவு விகிதம் 68% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, மற்றும் பெண்களின் கல்வியறிவு 59% ஆகும்.
சாயல்குடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். தொண்டி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். சாயல்குடி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.