No products in the cart.
தினம் ஓர் ஊர் – சங்கரன்கோவில் – 24/07/23
தினம் ஓர் ஊர் – சங்கரன்கோவில்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 350,144
கல்வியறிவு – 75.28%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – சங்கரன்கோவில்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. E.Raja (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)
நகராட்சி தலைவர் – Bro. R.Sadhir
நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah
நகராட்சி ஆணையர் – Bro. N.Baskar (Sankarankoil)
Municipal Engineer – Bro. R.Jayaseelan
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
ஜெபிப்போம்
சங்கரன்கோவில் (Sankarankovil), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். தென்காசி மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் பெரிய நகரமாக சங்கரன்கோவில் உள்ளது. முன்பு சங்கரநயினார்கோயில் என்று அழைக்கப்பட்டது. சங்கர நாராயணர் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது. சங்கரன்கோவில் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
சங்கரன்கோவில் நகராட்சியானது, தமிழகத்தில் உள்ள முதல் நிலை நகராட்சிகளில் ஒன்றாகும். சங்கரன்கோவில் நகராட்சியானது 2014-ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதியதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட இருந்த நிலையில் சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் செயல்படும் என்று 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. தற்போது தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. சங்கரன்கோவில் நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
சங்கரன்கோவில் வட்டம் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இது தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய வருவாய் வட்டம் ஆகும். இந்த வட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், வீரசிகாமணி, சேர்ந்தமங்கலம், குருக்கள்பட்டி, வன்னிக்கோனந்தல் என 6 குறுவட்டங்களும், 44 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம்.
இந்நகராட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. E.Raja அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
தென்காசி மாவட்ட கலெக்டர் Bro. Durai Ravichandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. E.T.Samso அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. M.Nagaranjan அவர்களுக்காகவும், சிறப்பு மாவட்ட வருவாய் ஆணையர் Bro. A.Abdul Kadar @ Abu அவர்களுக்காகவும், ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.
தென்காசி மாவட்ட நகராட்சி ஆணையர் Sis. S.M.Farijan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Sadhir அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Bro. K.N.L.Subbaiah அவர்களுக்காகவும், சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர் Bro. N.Baskar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
இந்த நகராட்சியில் மொத்தம் 350,144 மக்கள் உள்ளனர். அவர்களில் 172,965ஆண்கள் மற்றும் 177,179 பெண்கள் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.14% பேரும், இசுலாமியர்கள் 2.18% பேரும், கிறித்தவர்கள் 5.58%, பிற மதத்தை சார்ந்தவர்கள் 0.10% ஆக உள்ளார்கள். இந்த நகரத்தில் மொத்தம் 95,446 வாழ்கிறார்கள். சங்கரன்கோவில் நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக வேளாண் சார்ந்த தொழில் (விவசாயம்) சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய தொழிலாக உள்ளது. வேளாண் வணிகத்தைத் தவிர, இந்த நகரம் ஜவுளிக்கும் பெயர் பெற்றது. டெர்ரி டவல்கள், காட்டன் புடவைகள், லுங்கிகள் , கைக்குட்டைகள் போன்ற பல்வேறு வகையான ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கிட்டத்தட்ட 4000 விசைத்தறிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளன. இதற்காக ஜெபிப்போம்.