No products in the cart.
தினம் ஓர் ஊர் – கொமாரலிங்கம் (Komaralingam) – 02/10/24
தினம் ஓர் ஊர் – கொமாரலிங்கம் (Komaralingam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருப்பூர்
வட்டம் – மடத்துக்குளம்
பரப்பளவு – 32 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)
மக்கள் தொகை – 181,386
கல்வியறிவு – 69.80 %
District Collector – Bro. T Christuraj , I.A.S
District Revenue Officer – Bro. K Karthikeyan
Commissioner of Police – Sis. Lakshmi IPS
Superintendent of Police – Bro. Abhishek Gupta IPS
Municipal Commissioner – Bro. P.Balamurugan
Municipal Chairman – Bro. M.Matheen
மக்களவைத் தொகுதி – பொள்ளாச்சி
சட்டமன்றத் தொகுதி – மடத்துக்குளம்
மக்களவை உறுப்பினர் – Bro. Eswaraswami (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. C. Mahendran (MLA)
Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)
District Munsif cum Judicial Magistrate – Bro. K.Vijayakumar (Madathukulam)
ஜெபிப்போம்
கொமாரலிங்கம் (Komaralingam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியானது விவசாயம் சார்ந்த பேருராட்சியாகும்.
கொங்கு நாட்டில் வாழ்ந்த வள்ளல்களில் குமணவள்ளல் பின் வந்தோர் இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. இந்த நகரம் முன்பு ” குமணமங்கலம்” என்றும் பின்னர் “குமண-லிங்கம்” என்றும் அழைக்கப்பட்டது, இது பழனி மற்றும் உடுமலைப்பேட்டைக்கு இடைப்பட்ட பகுதியை ஆண்டதாக நம்பப்படும் குமணனின் பெயரால் அழைக்கப்பட்டது.
இப்பேரூராட்சியானது குமரலிங்கம் மேற்கு, குமரலிங்கம் கிழக்கு என இரண்டு வருவாய் கிராமங்களையும், குமரலிங்கம், சமராயப்பட்டி, பெருமாள்புதூர், குருவக்குளம் என 4 குக்கிராமங்களையும் கொண்டது.
கொமாரலிங்கம் பேரூராட்சியானது 32 சகிமீ பரப்பளவை கொண்டுள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 75 கிமீ; மடத்துக்குளம் 8 கிமீ; உடுமலைப்பேட்டை 15 கிமீ; பழநி 15 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சி மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் Bro. C. Mahendran அவர்களுக்காகவும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் Bro. Eswaraswami அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
கொமாரலிங்கம் பேரூராட்சியானது 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 110 தெருக்களும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 13,642 ஆகும். அவர்களில் 6,791 பேர் ஆண்கள் மற்றும் 6,851 பேர் பெண்கள். இந்த நகரத்தில் 3,854 குடும்பங்கள் வசிக்கிறார்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1266 ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.98% ஆகவும், முஸ்லிம்கள் 8.36% ஆகவும், கிறிஸ்தவர்கள் 0.59% ஆகவும், மற்றவர்கள் 0.06% ஆகவும் உள்ளனர்.
இப்பேரூராட்சியில் நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), கரும்பு, வாழை அதிகமாக விளைகின்றன. இது அமராவதியாற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளதால் செழிப்பான நிலப்பகுதியாகும். விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
கொமாரலிங்கம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். விவசாயிகளுக்காக ஜெபிப்போம். கொமாரலிங்கம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.