Daily Updates

தினம் ஓர் ஊர் – கொங்கணாபுரம் (Konganapuram) – 11/09/24

தினம் ஓர் ஊர் – கொங்கணாபுரம் (Konganapuram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

வட்டம் – எடப்பாடி

பரப்பளவு – 9.60 சகிமீ

மக்கள் தொகை – 9,286

கல்வியறிவு – 61%

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Edappadi Municipality Commissioner – Bro. S.Musthaba

Edappadi Municipality Chairman – Bro. D.S.M. Basha

Edappadi Municipality Vice – Chairman – Sis. N. Radha

மக்களவைத் தொகுதி – சேலம்

சட்டமன்றத் தொகுதி – எடப்பாடி

மக்களவை உறுப்பினர் – Bro. Tm Selvaganapathi (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Edappadi K. Palaniswami (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

District Munsif-cum- Judicial Magistrate – Bro. K.Vignesmadhu (Edappadi)

ஜெபிப்போம்

கொங்கணாபுரம் (Konganapuram) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் எடப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொங்கணபுரம் பேரூராட்சியில் உள்ளது.

ஆரம்பகால வரலாறு கொங்கு மக்களின் அடர்த்தியான மக்கள்தொகை காரணமாக “கொங்கணாபுரம்” என்ற பெயர் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சேலமும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதியும் பண்டைய காலத்தில் சேர மற்றும் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. சேலத்தின் சில பகுதிகள் பண்டைய தமிழ்நாட்டின் குறுநில மன்னர்கள் அவர்களின் சொந்த கொங்கு மன்னர்களால் ஆளப்பட்டது. கொங்கணாபுரம் பாளையக்காரரால் ஆளப்பட்டது.

இப்பேரூராட்சி முதன் முதலாக ஊராட்சி ஒன்றியமாக 1954 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் உத்தரவு படி 1967 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாகவும், 1981 ஆம் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாகவும், 1985 ஆம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

இப்பேரூராட்சி மொத்த பரப்பளவு 9.60 ச.கி.மீ ஆகும். கொங்கணபுரம் பேரூராட்சிக்கு தெற்கே சேலம் 36 கிமீ தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் எடப்பாடி 10 கிமீ; வடக்கில் ஓமலூர் 34 கிமீ, தெற்கில் ஈரோடு 36 கிமீ தொலைவிலும் உள்ளது.

கொங்கணாபுரம் பேரூராட்சி எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் Bro. Edappadi K. Palaniswami அவர்களுக்காகவும், சேலம் மக்களவை உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கொங்கணாபுரம் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. எடப்பாடி  Municipal Commissioner Bro. S.Musthaba அவர்களுக்காகவும், Edappadi Municipal Chairman Bro. D.S.M. Basha அவர்களுக்காகவும், Edappadi Municipal  Vice – Chairman Sis. N. Radha  அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கொங்கணாபுரம் டவுன் பஞ்சாயத்தில் 9,286 மக்கள்தொகை உள்ளது, இதில் 4,721 ஆண்கள் மற்றும் 4,565 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில்  2,614 குடும்பஙக்ள் வசிக்கிறார்கள். கொங்கணாபுரத்தின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 49%. கொங்கணாபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 99.02%, இஸ்லாமியர்கள் 0.23%, கிறிஸ்தவர் 0.66% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.

இப்பேரூராட்சியில் உள்ள மொத்த 4308 உழைக்கும் மக்களில், 83.17 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற எல்லா வேலைகளுக்காகவும் ஜெபிப்போம். தொழில்கள் வளர்ச்சி அடைய ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களையும், இவர்களுடைய குடும்பங்களையும் பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

கொங்கணாபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். கொங்கணாபுரம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம். சத்தியத்தை அறியாத மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.