No products in the cart.

தினம் ஓர் ஊர் – குளத்தூர் (Kulathur) – 01/05/25
தினம் ஓர் ஊர் – குளத்தூர் (Kulathur)
மாவட்டம் – புதுக்கோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 1,62,524
கல்வியறிவு – 73.53%
மக்களவைத் தொகுதி – திருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதி – கந்தர்வகோட்டை (தனி)
மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta
மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R
Chief Judicial Magistrate – Bro. K.S.Paulpandian (Pudukkottai)
Principal Subordinate Judge – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)
ஜெபிப்போம்
குளத்தூர் தாலுக்கா என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா ஆகும். தாலுகாவின் தலைமையகம் குளத்தூர் நகரம் ஆகும். இவ்வட்டத்தில் குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தொன்மை மிக்க குன்றாண்டார்கோயில் குகைக்கோவில் இவ்வட்டத்தில் உள்ளது.
குளத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் நார்த்தாமலை, மாத்தூர், கிள்ளுக்கோட்டை, குன்னாண்டார்கோயில், கீரனூர் என 5 உள்வட்டங்களும், 73 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த நகரம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
இவ்வட்டம் 1,62,524 மக்கள்தொகை கொண்டது. இதில் 81,433 ஆண்களும், 81,091 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 92.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 38,064 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 87.73%, இசுலாமியர்கள் 3.28%, கிறித்தவர்கள் 8.64% மற்றும் பிற மதங்களை பின்பற்றுகிறவர்கள் 0.34% ஆக உள்ளனர்.
குளத்தூர் ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். குளத்தூர் ஊராட்சியில் 93 குடிநீர் இணைப்புகள், 7 சிறு மின்விசைக் குழாய்கள், 1 கைக்குழாய்கள், 10 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 21 உள்ளாட்சிக் கட்டடங்கள், 11 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 13 ஊரணிகள் அல்லது குளங்கள், 17 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 10 ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது.
குளத்தூர் வட்டத்திற்காக ஜெபிப்போம். குளத்தூர் நகரத்தில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். குளத்தூர் பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள சிறுபிள்ளைகள் மற்றும் வாலிப பிள்ளைகள் மத்தியில் கர்த்தர் எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். இவ்வட்டத்தில் வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருக்காகவும், திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். குளத்தூர் வட்டத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.