Daily Updates

தினம் ஓர் ஊர் – குருந்தன்கோடு (Kurunthencode) – 26/08/23

தினம் ஓர் ஊர் – குருந்தன்கோடு (Kurunthencode)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 6040
கல்வியறிவு – 68.73%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – குளச்சல்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. J.G.Prince (MLA)
நகராட்சி ஆணையாளர் – Bro. R.Vijayakumar
நகராட்சி தலைவர் – Bro. A.Nazeer
நகராட்சி துணை தலைவர் – Sis. S.Sherly Florence
ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் – Sis. அனுஷா தேவி
Principal District Court – Bro. S.Arulmurugan

ஜெபிப்போம்

குருந்தன்கோடு (Kurunthencode) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதி அல்லது ஊராட்சி ஒன்றியம் ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒன்பது நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

இந்த ஊராட்சி, குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். குளச்சல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. J.G.Prince அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் நகராட்சி ஆணையாளர் Bro. R.Vijayakumar அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. A.Nazeer அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis.S.Sherly Florence அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் Sis. அனுஷா தேவி அவர்களுக்காக ஜெபிப்போம். ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.

குருந்தன்கோடு ஊராட்சியில் மொத்தம் 6040 மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெண்கள் 3014 பேரும் ஆண்கள் 3026 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இங்குள்ள குடும்பங்களை கர்த்தருடைய கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

இந்த ஊராட்சியில் 1557 குடிநீர் இணைப்புகள், 15 சிறு மின்விசைக் குழாய்கள், 16 கைக்குழாய்கள், 24 ஊரணிகள் அல்லது குளங்கள், 18 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 80 உள்ளாட்சிக் கட்டடங்கள், 3 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 1 விளையாட்டு மையங்கள், 1 சந்தைகள், 46 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 10 ஊராட்சிச் சாலைகள், 1 பேருந்து நிலையங்கள் இதுபோன்ற அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபித்துகொள்ளுவோம்.

குருந்தன்கோடு ஊராட்சிக்காக ஜெபிப்போம். இந்த ஊராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள உள்ள மக்களுக்காக அவர்கள் செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இந்த ஊராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். அதன்மூலம் அநேக மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.