Daily Updates

தினம் ஓர் ஊர் – கீழ்குந்தா (Kilkundha) – 28/01/25

தினம் ஓர் ஊர் – கீழ்குந்தா (Kilkundha)

மாவட்டம் – நீலகிரி

வட்டம் – குந்தா

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 8886

கல்வியறிவு – 83.45 %

மாவட்ட ஆட்சியர் – Sis. Lakshmi Bhavya Tanneeru I.A.S.,

Superintendent of Police  – Sis. N.S. Nisha I.P.S.,

Additional Collector (Dev) /

Project Director, DRDA /

Project Director, SADP  – Bro. H.R. Koushik I.A.S.,

District Revenue Officer – Bro. M. Narayanan

மக்களவைத் தொகுதி – நீலகிரி

சட்டமன்றத் தொகுதி – உதகமண்டலம்

மக்களவை உறுப்பினர் – Bro. A. Raja (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. R. Ganesh (MLA)

Municipal Commissioner  – Sis. S.Sivaranjani

Chairman – Sis. Parimala. S

District Judge  – Bro. N. Muralidharan

ஜெபிப்போம்

கீழ்குந்தா (Kilkundha) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 26 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு குந்தா நீர்மின்னாக்கத் திட்டம் செயல்படுகிறது.

கீழ்குந்தா, உதககமண்டலத்திலிருந்து 33 கீமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேல் குந்தா ஊராட்சி 5 கிமீ; பிக்கெட்டி 6 கிமீ; பாலகோலா ஊராட்சி 20 கிமீ தொலைவில் உள்ளது.

இப்பேரூராட்சி உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. உதகமண்டலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. R. Ganesh அவர்களுக்காகவும், நீலகிரி மக்களவை உறுப்பினர் Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கீழ்குந்தா நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியின் Municipal Commissioner Sis. S.Sivaranjani அவர்களுக்காகவும், Chairman Sis. Parimala. S அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம்.

கீழ்குந்தா டவுன் பஞ்சாயத்து 8,886 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது, இதில் 4,280 ஆண்கள் மற்றும் 4,606 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 638 ஆகும், இது கில்குண்டாவின் மொத்த மக்கள் தொகையில் 7.18 % (TP) ஆகும்.இப்பேரூராட்சியில் மொத்தம் 2,636 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இப்பேரூராட்சியில் ஆண்களின் கல்வியறிவு 92.70% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 79.32% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்து 91.45%,  முஸ்லிம்கள் 4.14% மற்றும் கிறிஸ்தவர்கள் 4.10% உள்ளனர்.

இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 4,697 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,637 ஆண்கள் மற்றும் 2,060 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

கீழ்குந்தா பேரூராட்சிக்காக ஜெபிப்போம். கீழ்குந்தா நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். கீழ்குந்தா பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.