No products in the cart.

தினம் ஓர் ஊர் – காளையார் கோவில் (Kalaiyarkoil) – 10/02/25
தினம் ஓர் ஊர் – காளையார் கோவில் (Kalaiyarkoil)
மாவட்டம் – சிவகங்கை
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சிவகங்கை
மக்கள் தொகை – 1,57,631
கல்வியறிவு – 80%
மாவட்ட ஆட்சியர் – Sis. Asha Ajith (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Ashish Rawat (I.P.S)
District Revenue Officer – Bro. Shanmugavelu
மக்களவைத் தொகுதி – சிவகங்கை
சட்டமன்றத் தொகுதி – சிவகங்கை
மக்களவை உறுப்பினர் – Bro. Karti P.Chidambaram (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. R. Senthilnathan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. G.S. KRISHNARAM
நகராட்சி தலைவர் – Bro. CM. Durai Anand
நகராட்சி துணை தலைவர் – Bro. Karkannan
Principal District and Sessions Judge – Sis. K.Arivoli (Sivagangai)
ஜெபிப்போம்
காளையார்கோயில் (Kalayarkoil) தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். காளையார்கோவில் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்ட நிர்வாகத் தலைமையிடமான காளையார்கோயில் நகரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுத்தலம். இக்கோயில் மூலவர் பெயர் சொர்ணகாளீஸரர் ஆகும். இது மருதுபாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இங்கு சிவகங்கை ராஜா குடும்பத்தினருக்குச் சொந்தமான பெரியசிவன்கோவில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள முக்கியமான இடங்களில் காளையார்கோவிலும் ஒன்று.
சிவகங்கையிலிருந்து 18 கிலோமீட்டர் கிழக்காக காளையார்கோவில் அமைந்துள்ளது. பரமக்குடியிலிருந்து வடக்கு திசையிலிருந்து 37கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. காரைக்குடிக்கு தெற்கு திசையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
காளையார்கோவில் சிவகங்கை மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் மறவமங்கலம், நாட்டரசன்கோட்டை, மல்லல், சிலுக்கப்பட்டி என 5 உள்வட்டங்களும், 63 வருவாய் கிராமங்களும் உள்ளன. காளையார்கோவில் வருவாய் வட்டத்திற்கு மேற்கில் சிவகங்கை வட்டம், கிழக்கில் தேவகோட்டை வட்டம், வடக்கில் காரைக்குடி வட்டம் மற்றும் தெற்கில் இளையான்குடி வட்டம் எல்லைகளாக உள்ளது.
காளையார்கோவில் வட்டம் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். சிவகங்கை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. P. R. Senthilnathan அவர்களுக்காகவும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Karti P.Chidambaram அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் உண்மையுடனும், பொறுப்புடனும் செய்ய ஜெபிப்போம்.
சங்க காலத்தில் காளையார்கோவில் வேங்கை மார்பன் என்ற அரசரால் ஆளப்பட்டது. பிறகு மன்னர் முத்து வடுக நாதராலும், மருது சகோதரர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. சங்க காலத்தில், இந்த இடம் கானப்பேர் என்று அழைக்கப்பட்டது. இதற்கான சான்று, புறநானூற்றில், 21ஆம் பாடலில் ஐயூர் மூலங்கிழார், சங்க கால கவிஞ்ர், குறிப்பிட்டுள்ளார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் சுந்தர மூர்த்தி நாயனார், இக்கோயிலிள்ள் மூலவரை காளை என்று விவரித்துப் பாடினார். அன்று முதல், இத்திருக்கோயில் காளையார்கோயில் என்று அழைக்கப்பட்டது.
காளையார்கோவில் தாலுகாவில் நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் மில் உள்ளது, இது காளீஸ்வரா மில்ஸ் பி யூனிட் என்றும் அறியப்பட்டது. இந்த நகரத்தில் உள்ள நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். காளையார்கோயில் நகரத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். இங்கு நெல், நிலக்கடலை முக்கிய விளையும் பயிர்கள் ஆகும். விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்யும் வேலையை கர்த்தர் ஆசீர்வதித்து பாதுகாக்கும்படி ஜெபிப்போம்.
காளையார்கோவில் நகரத்திற்காக ஜெபிப்போம். காளையார்கோவில் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். காளையார்கோவில் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.