Daily Updates

தினம் ஓர் ஊர் – காரைக்குடி (Karaikudi) – 06/02/25

தினம் ஓர் ஊர் – காரைக்குடி (Karaikudi)

மாவட்டம் – சிவகங்கை

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 3,00,527

கல்வியறிவு – 84.59%

மக்களவைத் தொகுதி – சிவகங்கை

சட்டமன்றத் தொகுதி – காரைக்குடி

மக்களவை உறுப்பினர் – Bro. Karti P.Chidambaram (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Mangudi (MLA)

மாவட்ட ஆட்சியர் – Sis. Asha Ajith (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer – Bro. Shanmugavelu

நகராட்சி ஆணையர் – Sis. S.Chitra

நகராட்சி தலைவர் –  Bro. S.Muthudurai

நகராட்சி துணை தலைவர் – Bro. N.Gunasekaran

Principal District and Sessions Judge  – Sis. K.Arivoli (Sivagangai)

Judicial Magistrate Fast Track Court – Sis. C.Jayapradha (Karaikudi)

District Munsif – Bro. A.Ramesh (Karaikudi)

Judicial Magistrate – Bro. J.Karmega Kannan (Karaikudi)

ஜெபிப்போம்

காரைக்குடி (Karaikudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பழங்கால இலக்கியங்களில் காரைக்குடி என்று குறிப்பிடப்படும் முள் செடியான காரையிலிருந்து இந்த நகரம் அதன் பெயரைப் பெற்றது, இது நவீன காலத்தில் காரைக்குடியாக மாறியுள்ளது. இது பொதுவாக “செட்டிநாடு” என்று குறிப்பிடப்படும் பகுதியின் ஒரு பகுதியாகும், மேலும் கரை வீடு என்று அழைக்கப்படும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட அரண்மனை வீடுகள் காரணமாக, தமிழக அரசால் காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரம் 1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே காரைக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக காரைக்குடி இருந்தது. பின்னர் சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின்னர் தேர்வு நிலை நகராட்சியாக 1988-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. 2013-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

காரைக்குடி வட்டம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் காரைக்குடி, கல்லல், மித்திரவயல், பள்ளத்தூர், சாக்கோட்டை என ஐந்து உள்வட்டங்களும், 64 வருவாய் கிராமங்களும் உள்ளன. காரைக்குடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகராட்சி காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S.Mangudi அவர்களுக்காகவும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Karti P.Chidambaram அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவன்தாமே இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்தும்படி ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையோடு செய்ய கர்த்தர் கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம்.

காரைக்குடி நகராட்சி ஆணையர் Sis. S.Chitra அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. S.Muthudurai அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Bro. N.Gunasekaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்காகவும், இவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகராட்சியில் மொத்தம் 300,527 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இதில்  149,443 ஆண்களும், 151,084 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 39.5% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 76,868 குடும்பங்கள் இருக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 89.01% சதவீதமும், இசுலாமியர்கள் 6.01% சதவீதமும், கிறித்தவர்கள் 4.68% சதவீதமும் மற்றும் பிற மதத்தினர் 0.29%  சதவீதம் பேர் உள்ளார்கள்.

காரைக்குடியில் செட்டிநாடு கோட்டான் என்பது இப்பகுதி பெண்களால் நெய்யப்படும் பனை ஓலை கூடைகள். செட்டிநாடு கோட்டான் அதன் தனித்துவமான பாணி மற்றும் வண்ணங்களுக்காக குறிப்பிடத்தக்கது. மேலும் செட்டிநாடு கண்டாங்கி புடவைகள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பிரபலமான புடவை ஆகும். இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்யும் தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்டி ஜெபிப்போம்.

இந்தப் பகுதியில் புதுவயல் மற்றும் பள்ளத்தூரில் அமைந்துள்ள சுமார் 250 அரிசி ஆலைகள் மற்றும் காகித ஆலைகள் காரைக்குடியின் துணை நகரப் பகுதியான வணிக மற்றும் வணிகப் பொருளாதார வளர்ச்சிப் பகுதியாகும். இது தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆத்தங்குடி ஓடுகள் அடிப்படையில் சிமென்ட் ஓடுகள் மொசைக் போன்றவை நகரத்தில் உள்ள அரண்மனை வீடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் நவீன காலங்களில் கைவினைத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ளது.

காரைக்குடி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளில் அரசு பள்ளிகள் மற்றும் பல தனியார் பள்ளிகள், நகரத்தில் பல தனியார் கல்லூரிகள் உள்ளன. அழகப்பா பல்கலைக்கழகம் இந்த ஊரில் அமைந்துள்ளது மற்றும் அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இங்குள்ள பழமையான கல்லூரியாகும், இது 1953 இல் நிறுவப்பட்டது. அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரிகள் காரைக்குடி பகுதியில் அமைந்துள்ளன. இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகராட்சியில்ஆயிரம் ஜன்னல் வீடு, கானாடுகாத்தான் அரண்மனை, ஆத்தங்குடி அரண்மனை, கண்ணதாசன் மணிமண்டபம், கம்பன் மணிமண்டபம், அழகப்பர் அருங்காட்சியகம், சங்கரபதி கோட்டை ஆகியவை நகரின் சுற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற செட்டிநாட்டு உணவு வகைகள் காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவானது.

காரைக்குடி நகரத்திற்காக ஜெபிப்போம். காரைக்குடி நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். காரைக்குடியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். காரைக்குடி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.