Daily Updates

தினம் ஓர் ஊர் – காமயகவுண்டன்பட்டி (Kamayagoundanpatti) – 02/11/23

தினம் ஓர் ஊர் – காமயகவுண்டன்பட்டி (Kamayagoundanpatti)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தேனி

மக்கள் தொகை – 16,134

கல்வியறிவு – 76.2%

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – கம்பம்

மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)

District Revenue Officer – Sis. Jeyabharathi

District Forest Officer – Bro. S.Kowtham

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Eramakrishnan (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan

நகராட்சி தலைவர் –  Sis. B.Renupriya

நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam

Principal District Judge  – Sis. K. Arivoli

Judicial Magistrate  – Bro. A.Ramanathan (Uthamapalayam)

Subordinate Judge  – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)

District Munsif  – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)

ஜெபிப்போம்

காமயகவுண்டன்பட்டி (Kamayagoundanpatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காமயகவுண்டன்பட்டி பேருராட்சி முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

மாவட்ட ஆட்சியர் Sis. R.V.Shajeevana அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. Dongare Pravin Umesh அவர்களுக்காகவும், District Revenue Officer Sis. Jeyabharathi அவர்களுக்காகவும், District Forest Officer Bro. S.Kowtham அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை வழிநடத்திட ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

காமயகவுண்டன்பட்டி 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.  ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். நகராட்சி ஆணையர்  Bro. M.Ganesan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. B.Renupriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 13 சகிமீ பரப்பும், 64 தெருக்களும் கொண்டது. காமயகவுண்டன்பட்டியின் மொத்த மக்கள் தொகை 16,134 ஆகும். இதில் 7,838 ஆண்கள் மற்றும் 8,296 பெண்கள் உள்ளனர். இந்த நகரில் மொத்தம் 4,725 குடும்பங்கள் வசிக்கின்றன. காமயகவுண்டன்பட்டியில் உள்ள மொத்த இந்து மக்கள் தொகை 15,873 ஆகும், இது மொத்த மக்கள் தொகையில் 98.38% ஆகும். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களுடைய இரட்சிப்பிற்காகவும், தேவைகளுக்காக ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய ஆளுகை உண்டாயிருக்க ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.

காமயகவுண்டன்பட்டியின் கல்வியறிவு விகிதம் 76.2% ஆகும். தேனி மாவட்டத்தின் 77.3% கல்வியறிவு விகிதத்துடன் ஒப்பிடும்போது காமயகவுண்டன்பட்டி குறைவான கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. காமயகவுண்டன்பட்டியில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 84.52% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 68.49% ஆகவும் உள்ளது. இந்த பேரூராட்யில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேருராட்சியில் திராட்சை பயிரிடுதல் முக்கிய தொழிலாகும். மேலும் திராட்சை பழரசம் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. காமயகவுண்டன்பட்டி டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில் 7,774 பேர் முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 266 பேர் விவசாயிகள் மற்றும் 5,340 பேர் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.