Daily Updates

தினம் ஓர் ஊர் – கானாடுகாத்தான் (Kanadukathan) – 15/02/25

தினம் ஓர் ஊர் – கானாடுகாத்தான் (Kanadukathan)

மாவட்டம் – சிவகங்கை

வட்டம் – காரைக்குடி

மாநிலம் – தமிழ்நாடு

பரப்பளவு – 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)

மக்கள் தொகை – 5,275

கல்வியறிவு – 84.59%

மக்களவைத் தொகுதி – சிவகங்கை

சட்டமன்றத் தொகுதி – காரைக்குடி

மாவட்ட ஆட்சியர் – Sis. Asha Ajith (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer – Bro. Shanmugavelu

Principal District and Sessions Judge  – Sis. K.Arivoli (Sivagangai)

Judicial Magistrate Fast Track Court – Sis. C.Jayapradha (Karaikudi)

District Munsif – Bro. A.Ramesh (Karaikudi)

Judicial Magistrate – Bro. J.Karmega Kannan (Karaikudi)

ஜெபிப்போம்

கானாடுகாத்தான் (Kanadukathan) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கை யிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், காரைக்குடி. மாநகரிலிருந்து15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள செட்டிநாடு தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கானப் பேரேயில் எனும் பெருங்காடு இப்பகுதியில் இருந்திருக்கிறது. இது காளையார் கோவில் வரை நீண்டிருந்தது. சங்ககாலத்தில் கானப்பேரெயில் என வழங்கப்பட்டது வேங்கைமார்பன் என்பவன் இவ்வூரில் இருந்துகொண்டு ஆண்ட சங்ககால மன்னன். உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் வேங்கைமார்பனை வென்று இந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டான். இதனால் இந்தப் பாண்டியனைக் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி எனச் சிறப்பித்துள்ளனர்.

பிற்காலத்தில் பாண்டியர்களது வீழ்ச்சிக்கு பின்,விசய நகர பேரரசின் படையெடுப்புகளாலும் பல பாளையங்களாக பிரிக்கப்பட்டது. சேதுபதி பாளையக்காரர்களாலும் பின் மருது சகோதரர்களாலும் ஆளப்பட்டு, ஆங்கிலேயர் உடனான போர்களால் இப்பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் சென்றது. பின் ஆங்கிலேயர் நகரத்தார்களின் நிர்வாகத்தின் கீழ் இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். விடுதலைக்கு பின் மக்களாட்சியின் கீழ் இப்பகுதி வந்துள்ளது.

கானாடுகாத்தான் டவுன் பஞ்சாயத்தில் 5,275 மக்கள்தொகை உள்ளது, இதில் 2,634 ஆண்கள் மற்றும் 2,641 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 442 ஆகும், இது கானாடுகாத்தானின் (TP) மொத்த மக்கள் தொகையில் 8.38 % ஆகும். கானாடுகாத்தானில் ஆண்களின் கல்வியறிவு 92.17% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 80.74% ஆகவும் உள்ளது. கானாடுகாத்தான் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 1,362 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 97.04%, முஸ்லிம் 1.06% மற்றும் கிறிஸ்தவர் 0.99% உள்ளனர்.

இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 1,769 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 1,410 பேர் ஆண்கள், 359 பேர் பெண்கள். மொத்த 1769 உழைக்கும் மக்களில், 74.62 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

கானாடுகாத்தான் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். கானாடுகாத்தான் நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். கானாடுகாத்தான் பேரூராட்சியின்  எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.