No products in the cart.
தினம் ஓர் ஊர் – காங்கேயம் (Kangeyam) – 22/09/24
தினம் ஓர் ஊர் – காங்கேயம் (Kangeyam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருப்பூர்
மக்கள் தொகை – 209,385
கல்வியறிவு – 73.47%
District Collector – Bro. T Christuraj , I.A.S
District Revenue Officer – Bro. K Karthikeyan
Commissioner of Police – Sis. Lakshmi IPS
Superintendent of Police – Bro. Abhishek Gupta IPS
Municipality Commissioner – Bro. S. Moorthy
Chairman – Bro. N.Suryaprakash
Vice – Chairman – Sis. R. Kamalaveni
Revenue Inspector – Bro. P. Selvakumar (Kangeyam)
மக்களவைத் தொகுதி – ஈரோடு
சட்டமன்றத் தொகுதி – காங்கேயம்
மக்களவை உறுப்பினர் – Bro. Prakash (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. M. P. Saminathan (MLA)
Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)
District Munsif – Sis. K.S.Malathi (Kangeyam)
Judicial Magistrate – Bro. C.Senthil Kumar (Kangeyam)
Sub Judge – Bro. S.Santhanakrishnasamy (Kangeyam)
ஜெபிப்போம்
காங்கேயம் (Kangeyam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில உள்ள காங்கேயம் வட்டம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இவ்வூரைச் சேர்ந்த காளைகள் புகழ்பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் எனப்படுகின்றன. காங்கேயம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
காங்கேயம் காளை காங்கேயத்தை பூர்விகமாகக் கொண்ட நாட்டு மாட்டு இனமாகும். இவை கடும் வறட்சி காலங்களிலும் தன்னை தகவமைத்து வலிமையோடு வாழும் சிறப்பு கொண்டது. இவை குறுகிய, தடித்த, வலுவான கால்களும், குறுகிய கழுத்தும், உறுதியான கொம்பும் சிறிய உடல் ஆகியவற்றைக் கொண்ட காளைகள் ஆகும். மேலும் இவை பொதுவாக சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.
காங்கேயம் வட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இது தாராபுரம் வட்டத்தில் இருந்தது பிரிக்கப்பட்டு தனி வட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தின் கீழ் 4 உள்வட்டங்களும், 44 வருவாய் கிராமங்களும் உள்ளது. இவ்வட்டத்தில் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த நகராட்சியின் Municipality Commissioner Bro. S. Moorthy அவர்களுக்காகவும், Chairman Bro. N.Suryaprakash அவர்களுக்காகவும், Vice – Chairman Sis. R. Kamalaveni அவர்களுக்காகவும், Revenue Inspector Bro. P. Selvakumar (Kangeyam) அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகராட்சி காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M. P. Saminathan அவர்களுக்காகவும், ஈரோடு மக்களவை உறுப்பினர் Bro. Prakash அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
காங்கேயத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி 1980 களில் தொடங்கியது, தமிழ்நாட்டின் விவசாயிகள் முதன்முதலில் தேங்காய்களை வணிக ரீதியாக பயிரிடத் தொடங்கினர். இப்போதெல்லாம், காங்கேயம் இந்தியாவின் முக்கிய தேங்காய் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் ஒன்றாகும்; இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
காங்கேயம் தேங்காய் எண்ணெய் சர்வதேச அளவிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.எண்ணெய் உற்பத்தியில், தேங்காய் கொப்பரை முதலில் இதற்காக உருவாக்கப்பட்ட பெரிய களங்களில் உலர்த்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்வதற்காக அவை எண்ணெய் ஆலைகளில் பதப்படுத்தப்படுகின்றன.காங்கேயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 150 தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் காங்கேயம் தாலுகாவில் சுமார் 500 கொப்பரை பதப்படுத்துதல் மற்றும் உலர்த்தும் களங்கள் உள்ளன.
காங்கேயம் பெரிய அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலைகள் உள்ள காரணமாக “அரிசி மற்றும் எண்ணெய் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. காங்கேயத்தில் நெய் மற்றும் அலங்கார கல் உற்பத்தியும் முக்கிய வணிகமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படும் கல் “மூன் ஸ்டோன்” என்று அறியப்படுகிறது மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் கார்பன் உற்பத்தியில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று காங்கேயம். இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்பன் உள்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காங்கேயம், வாகன உற்கட்டமைப்புக்கு (கன்டெய்னர் மற்றும் திறந்த வகை) புகழ்பெற்ற நகரமாகும். கம்பிகள் உற்பத்தி செய்யும் சில நிறுவனங்களும் நகரத்திற்குள் அமைந்துள்ளன. காங்கேயத்தில் பல நூற்பு ஆலைகள் மற்றும் பின்னலாடை துணி உற்பத்தி நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதேபோல் paper அட்டை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்களும் நகரத்தை சுற்றி அமைத்துள்ளன.
இவ்வட்டம் 209,385 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 104,751 ஆண்களும், 104,634 பெண்களும் உள்ளனர். 64,069 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 59.1% வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.99%, இசுலாமியர்கள் 1.3% , கிறித்தவர்கள் 2.01% மற்றும் பிறர் 0.69% ஆகவுள்ளனர்.
காங்கேயம் நகரத்திற்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். காங்கேயம் நகரத்தில் இரட்சிக்கப்பட மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். காங்கேயம் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.