No products in the cart.
தினம் ஓர் ஊர் – கமுதி – 11/07/23
தினம் ஓர் ஊர் – கமுதி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – இராமநாதபுரம்
மக்கள் தொகை – 135,658
கல்வியறிவு – 77.33%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – முதுகுளத்தூர்
மாவட்ட ஆட்சியர் – Sis. Vishnu Chandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. P.Thangadurai (I.P.S)
District Revenue Officer – Bro. R.Govindarajalu
மக்களவை உறுப்பினர் – Bro. Kani K.Navas (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. R.S.Rajakannappan (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. M.Ajitha Barvin (Ramanathapuram)
நகராட்சி தலைவர் – Bro. K.Karmegam (Ramanathapuram)
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Praveen Thangam (Ramanathapuram)
District Revenue Inspector – Bro. Sekar
Town Planning Inspector – Bro. M.Rajkumar
Principal District and Sessions Judge – Sis. G.Vijaya
Additional District Judge (FTC) – Sis. N.Shanthi
District Munsif cum Judicial Magistrate – Bro. N.Venkatesan
ஜெபிப்போம்
கமுதி (Kamuthi), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கவின் முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது. கமுதி சோலார் பவர் ப்ராஜெக்ட் என்ற பெரிய சூரிய மின் நிலையத்தின் தாயகமாக அறியப்படுகிறது. இது உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்கு செயல்பட்டு வருகிறது. கமுதி பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
கமுதி வட்டம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் அபிராமம், கமுதி கிழக்கு, கமுதி மேற்கு, கோவிலாங்குளம் மற்றும் பெருநாழி என 5 உள்வட்டங்களும், 49 வருவாய் கிராமங்களும் உள்ளது. கமுதி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம்.
கமுதி பேரூராட்சி இராமநாதபுரத்திலிருந்து 85 கி.மீ தொலைவிலும், மானாமதுரையிலிருந்து 39 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 5.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 101 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காக, வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் உண்மையாக இருக்க ஜெபிப்போம்.
கமுதி பேரூராட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகதிக்கும் உட்பட்டது. முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. R.S.Rajakannappan அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Kani K.Navas அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Sis. Vishnu Chandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. P.Thangadurai அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது.
கமுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஜீன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டு திருவிழா நடைபெறும். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது. அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயை போக்க அரும்பாடுபட்டதாகவும், இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார். அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது. இந்த ஆலயத்திற்காக ஜெபித்துகொள்ளுவோம்.
கமுதி பேரூராட்சியில் செவ்வாய் கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர். இந்த சந்தைக்காகவும் அங்கு பொருட்களை வாங்கவும், விற்றகவும் வருகின்ற மக்களுக்காக ஜெபிப்போம்.
இவ்வட்டத்தில் மொத்தம் 135,658 மக்கள் உள்ளார்கள். அவர்களில் 67,200 ஆண்களும், 32,847 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 83.1% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் 32,847 குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.66% பேரும், இசுலாமியர்கள் 5.38% பேரும், கிறித்தவர்கள் 3.81% மற்றும் பிற மதத்தினர் 0.14% பேரும் வாழ்கின்றார்கள். கமுதி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
கமுதி பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தைகள் விதைக்கப்படவும், அநேக மக்களை கர்த்தர் ஊழியத்திற்கென்று தெரிந்துகொள்ளவும், அநேக சபைகளை ஆண்டவரை எழுப்பி தரவும் ஜெபிப்போம். விசேஷமாக வாலிப பிள்ளைகள் மற்றும் சிறுபிள்ளைகள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.