No products in the cart.

தினம் ஓர் ஊர் – கடையநல்லூர் (Kadayanallur) – 21/02/25
தினம் ஓர் ஊர் – கடையநல்லூர் (Kadayanallur)
மாவட்டம் – தென்காசி
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 399,946
கல்வியறிவு – 80.02%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – கடையநல்லூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Dr. G.S.Sameeran, I.A.S
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – Bro. Aravind, T.P.S.,
Municipal Commissioner – Bro. S.Ravichandran (Kadayanallur)
Principal District Judge – Bro. B. Rajavel (Tenkasi)
Additional District Judge – Bro. S. Manojkumar (Tenkasi)
Chief Judicial Magistrate – Bro. C.Kathiravan (Tenkasi)
ஜெபிப்போம்
கடையநல்லூர் (Kadayanallur) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். கடையநல்லூர் என்ற பெயர் கடையநல்லூரில் உள்ள இந்துக் கோயிலான கடையாலீஸ்வரர் கோவிலின் முதன்மைக் கடவுளின் பெயரான “கடைகாலீஸ்வர” என்பதிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நகரம் ஆகும்.
கடையநல்லூர் டிசம்பர் 06, 2008 முதல் நிலை நகராட்சியாய் தரம் உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.
கடையநல்லூர் வட்டம், தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் ஆய்க்குடி என 3 உள்வட்டங்களும் 31 வருவாய் கிராமங்களும் உள்ளது. கடையநல்லூர் வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட கடையநல்லூர் நெல் வயல்களாலும், தென்னைப் பண்ணைகளாலும், பல குளங்களாலும் சூழப்பட்டுள்ளது. நகரின் நடுவில் ஒரு சிறிய ஆறு ஓடுகிறது. நகரின் மேற்கு முனையில் சில பாறைப் பகுதிகள் உள்ளூரில் ‘பரம்பு’ என்று அழைக்கப்படுகின்றன. அட்டக்குளம், பாலூரணி, தாமரைக்குளம், அண்ணாமலை பேரி மற்றும் பாடியூத்துக்குளம் மற்றும் பெரியகுளம் ஆகியவை இந்த நகரத்தில் காணப்படும் குளங்கள் ஆகும்.
கடையநல்லூரில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள்; இருப்பினும், பலர் இப்போது இந்தியாவைச் சுற்றிலும் மத்திய கிழக்கு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் வேலை செய்கிறார்கள். சமீபகாலமாக கடையநல்லூர் தங்க வியாபாரத்தில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடையநல்லூரில் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள், திராட்சை, நெல் ஆகியன உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நகராட்சியில் மொத்தம் 3,99,946 மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 199,442 பேரும், பெண்கள் 200,504 பேரும் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 42.8% மக்கள் வாழ்கின்றார்கள், மேலும் இந்த நகரத்தில் குடும்பங்கள் 103,380 வாழ்கிறார்கள். இங்கு வாழும் மக்களில் இந்துக்கள் 77.82% பேர், இசுலாமியர்கள் 17.58% பேர், கிறித்தவர்கள் 4.48%, பிற மதத்தை சார்ந்தவர்கள் 0.02% பேர் இருக்கிறார்கள். கடையநல்லூர் நகராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
கடையநல்லூர் நகராட்சிக்காக ஜெபிப்போம். கடையநல்லூர் நகராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். கடையநல்லூர் நகராட்சியில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, ஊராட்சி மன்றங்களுக்காக, கடையநல்லூர் நகராட்சியில் உள்ள கிராம மக்களுக்காக ஜெபிப்போம். நகரத்தின் இயற்கை வளங்களுக்காக அவைகள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம். கடையநல்லூரில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக, நெசவாளர் குடும்பத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். கடையநல்லூர் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.