Daily Updates

தினம் ஓர் ஊர்-ஒத்தக்கால்மண்டபம் (Othakalmandapam) – 03/12/24

தினம் ஓர் ஊர்-ஒத்தக்கால்மண்டபம் (Othakalmandapam)

மாவட்டம்-கோயம்புத்தூர்

மாநிலம்-தமிழ்நாடு

வட்டம்-மதுக்கரை

பரப்பளவு -13.8 சதுர கிலோமீட்டர்கள் (5.3 sq mi)

மக்கள் தொகை-12,207

கல்வியறிவு-82.13 %

District Collector – Bro. Kranthi Kumar Pati I.A.S.

District Revenue Officer-Sis. M. Sharmila

Commissioner of Police -Bro. V. Balakrishnan I.P.S. (Coimbatore)

Commissioner Corporation of Coimbatore -Bro. Sivaguru Prabakaran I.A.S.

Revenue Divisional Officer-Bro. P.K. Govindan Coimbatore (North)

Revenue Divisional Officer -Bro. Pandarinathan Coimbatore (South)

மக்களவைத் தொகுதி-பொள்ளாச்சி

சட்டமன்றத் தொகுதி-கிணத்துக்கடவு

மக்களவை உறுப்பினர்-Bro. Eswaraswami (MP)

சட்டமன்ற உறுப்பினர்-Bro. S. Damodaran (MLA)

Municipal Commissioner -Bro. P. Pitchaimani (Madukkarai)

Chairman-Sis. Noorjahan (Madukkarai)

Vice – Chairman-Bro. Rameshkumar (Madukkarai)

Principal District Judge -Sis. G. Vijaya (Coimbatore)

District Munsif-Cum-Judicial Magistrate -Sis. T. Uma Maheswari (Madukkarai)

ஜெபிப்போம்

ஒத்தக்கால்மண்டபம் (Othakalmandapam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி கோயம்புத்தூர் மாநகராட்சியிலிருந்து தெற்கே 16 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனருகே செட்டிபாளையம், அரிசிபாளையம் ஊராட்சி, மலுமிச்சம்பட்டி ஊராட்சி, மயிலேறிபாளையம் ஊராட்சிகள் உள்ளன.

இந்த நகரமானது கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Damodaran அவர்களுக்காகவும், பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் Bro. Eswaraswami அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

ஒத்தக்கால்மண்டபம் நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Bro. P. Pitchaimani அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. Noorjahan அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. Rameshkumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 13.8 ச.கி.மீ. பரப்பும், 89 தெருக்களையும் கொண்டுள்ளது. ஒத்தக்கால்மண்டபம் டவுன் பஞ்சாயத்தில் 12,207 மக்கள்தொகை உள்ளது, இதில் 6,028 ஆண்கள் மற்றும் 6,179 பெண்கள் உள்ளனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1087 ஆகும், இது ஒத்தகல்மண்டபத்தின் (TP) மொத்த மக்கள் தொகையில் 8.90 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.56% , முஸ்லீம்கள் 0.32%,  கிறிஸ்தவர்கள் 2.78% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.

ஒத்தக்கால்மண்டபம் நகரத்தின் எழுத்தறிவு விகிதம் மாநிலத்தின் சராசரியை விட 82.13 % அதிகமாக உள்ளது. . ஒத்தகல்மண்டபத்தில், ஆண்களின் கல்வியறிவு 88.21% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 76.24% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் 3,394 வீடுகளுக்கு குடிநீர் மற்றும் சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன.

மொத்த மக்கள் தொகையில், 5,399 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,784 ஆண்கள் மற்றும் 1,615 பெண்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் செயல்பாடுகளை செய்பவர் என வரையறுக்கப்படுகிறது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.