Daily Updates

தினம் ஓர் ஊர் – ஒட்டன்சத்திரம் (Oddanchatram) – 31/03/25

தினம் ஓர் ஊர் – ஒட்டன்சத்திரம் (Oddanchatram)

மாவட்டம் – திண்டுக்கல்

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 182,600

கல்வியறிவு – 72.64%

மக்களவைத் தொகுதி – திண்டுக்கல்

சட்டமன்றத் தொகுதி – ஒட்டன்சத்திரம்

District Collector  – Bro.S. Saravanan, IAS

District Revenue Officer  – Sis. R.Jeyabharathi

Superintendent of PoliceRevenue  – Dr.A.Pradeep IPS

PRINCIPAL DISTRICT AND

SESSIONS JUDGE  – Sis. A.MUTHU SARATHA

Sub Judge  – Bro. P.DHANAPAL (Oddanchathiram)

District Munsif – Bro. S.KABALEESWARAN (Oddanchathiram)

Judicial Magistrate  – Sis. S.PRAVEENA (Oddanchathiram)

ஜெபிப்போம்

ஒட்டன்சத்திரம் (Oddanchatram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கம் நகராட்சி ஆகும். இந்த நகரம் தமிழகத்தின் காய்கறி நகரம் என்று அழைக்கப்படுகிறது. ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் உப்புலியபுரம் என்ற பெயரில் இந்த நகரம் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. உப்பிலியர்கள் ஒரு பழமையான தமிழ் குடி ஆகும். இவர்களை உப்பிலிய நாயக்கர் என்றும் அழைப்பர்.

ஒட்டன்சத்திரம் என்பது தமிழ்நாட்டின் தென்மேற்கில் உள்ள ஒரு பகுதி . இந்த நகரம் 1985 இல் மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் காய்கறி மற்றும் மாட்டுச்சந்தைக்கும் பிரபலமானது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக அளவில் காய்கறிகள் விற்பனையாகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது.

இந்த நகராட்சி காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்) இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர், வெண்ணெய் அனுப்பப்படுகின்றன.

இந்த நகரமானது ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. ஒட்டன்சத்திரம் வட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 57 வருவாய் கிராமங்கள் உள்ளன.

இந்த நகரத்தில் மொத்தம் 182,600  மக்கள்தொகையை கொண்டுள்ளது. இவர்களில் 91,247 ஆண்களும், 91,353 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 83.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 95.48%, இசுலாமியர்கள் 2.62%, கிறித்தவர்கள் 1.65% மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.24% ஆகவுள்ளனர். இவ்வட்டத்தில் மொத்தம் 52,829 குடும்பங்கள் வாழ்கிறார்கள்.

விவசாயம் தான் நகரத்திற்கு முக்கிய பொருளாதார ஆதரமாக அமைந்துள்ளது. மக்காச்சோளம், புகையிலை, காய்கறிகள் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, முருங்கை, பருத்தி, சூர்யகாந்தி, கரும்பு, உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன. விவசாயத் தொழில் உள்ளூர் மக்களுக்கு பெரும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஒட்டன்சத்திரம் தாலுகாவிற்கு, முக்கியமாக ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை பல்வேறு அண்டை நகரங்களில் இருந்து தொழிலாளர்கள் இடம்பெயர்கின்றனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழிலின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். ஒட்டன்சத்திரம் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.