No products in the cart.
தினம் ஓர் ஊர் – எட்டயபுரம் – 19/07/23
தினம் ஓர் ஊர் – எட்டயபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தூத்துக்குடி
மக்கள் தொகை – 74,991
கல்வியறிவு – 76.58%
மக்களவைத் தொகுதி – தூத்துக்குடி
சட்டமன்றத் தொகுதி – விளாத்திகுளம்
மாவட்ட ஆட்சியர் – Bro. K.Senthil Raj (I.A.S)
Additional Collector – Bro. Thakare Shubham Dnyandeorao (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L.Balaji Saravanan (I.P.S)
District Revenue Inspectors – Bro. K.V.Ganesan, Bro. M.Veerakumar
Executive Engineer – Bro. Ruban Suresh Ponnaiah
மக்களவை உறுப்பினர் – Sis. Kanimozhi Karunanidhi (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. V.Markandayan (MLA)
மாவட்ட ஆணையர் – Bro. C.Dineshkumar
மாவட்ட துணை ஆணையர் – Bro. T.Kumar, Bro. O.Rajaram
மேயர் – Bro. P.Jegan
துணை மேயர் – Sis. S.Jenitta
Principal District Judge – Bro. M.Selvam
ஜெபிப்போம்
எட்டயபுரம் (Ettayapuram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர். எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். எட்டயபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
எட்டயபுரம் முதலில் இளசநாடு, இது பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டது. பாண்டியர்களுக்குப் பிறகு, விஜயநகரப் பேரரசின் மேற்பார்வையில் மதுரை நாயக்கர் வம்சத்தால் எட்டப்பன் பாளையக்காரராக நியமிக்கப்பட்டார். எட்டப்பனின் வம்சாவளியினர் 150 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், இளசநாடு 1565 இல் எட்டயபுரம் ஆனது.
எட்டயபுரம் வட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் சோழபுரம், எட்டயபுரம், கடலையூர், முத்துலாபுரம், படர்ந்தபுளி என 4 உள்வட்டங்களும், 56 வருவாய் கிராமங்கள் உள்ளன. மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார். எட்டயபுரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம்.
தூத்துக்குடிக்கும் – கோவில்பட்டிக்கும் இடையே அமைந்த எட்டயபுரம், தூத்துக்குடியிலிருந்து 43 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. எட்டயபுரம் பேரூராட்சி 17.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் 3,646 வீடுகளையும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காக, வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
எட்டயபுரம் என்பது தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இது முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது . இது 2006 பொதுத் தேர்தல் வரை கோவில்பட்டி தொகுதியில் இருந்தது. இப்போது 2011 தேர்தலில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் விளாத்திகுளம் தொகுதியின் கீழ் வருகிறது. விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. V.Markandayan அவர்களுக்காகவும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Kanimozhi Karunanidhi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாக்கும் கரம் இவர்களோடுகூட இருந்து வழிநடத்தும்படி ஜெபிப்போம்.
இவ்வட்டத்தில் மொத்தம் 74,991 மக்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 36,490 பேரும், பெண்கள் 38,501 பேரும் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் 83%பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றார்கள். இந்த பேரூராட்சியில் 22,161 குடும்பங்கள் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.09%, இசுலாமியர்கள் 0.77%, கிறித்தவர்கள் 3.97% , பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.17% பேரும் வாழ்கிறார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் பாரப்பட்டு ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
எட்டயபுரம் மக்கள் நெசவு, தீப்பெட்டி செய்தல் மற்றும் விவசாயம் போன்றவற்றை முதன்மையாக செய்து வருகின்றனர் . பாரம்பரிய நெசவாளர்கள் கைத்தறியைப் பயன்படுத்தி பருத்தி நூலை நெய்கின்றனர். சிறு நிறுவனங்கள் விசைத்தறிகள் மற்றும் நெசவு மற்றும் சாயமிடுவதற்கு நூல் தயாரிக்கும் வணிகத்துடன் தொடர்புடையவை. மற்ற முக்கிய தொழில் தீப்பெட்டிகள் தயாரிப்பதாகும், இதில் தீப்பெட்டிகள் அடங்கிய சிறிய பெட்டிகளை தயாரித்தல், தீப்பெட்டிகளை தயார் செய்து தீப்பெட்டிகளில் ஏற்றுதல் ஆகியவை அடங்கும். கேழ்வரகு, கம்பு, சோளம், பருத்தி மற்றும் சூரியகாந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம். எட்டயபுரத்தில் உள்ள தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும், அதில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்களின் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்