Daily Updates

தினம் ஓர் ஊர் – ஊத்தங்கரை (Uthangarai) – 18/12/24

தினம் ஓர் ஊர் – ஊத்தங்கரை (Uthangarai)

மாவட்டம் – கிருஷ்ணகிரி

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 213,291

கல்வியறிவு – 85.11 %

District Collector  –  Sis. K. M. Sarayu, I.A.S.,

Superintendent of Police  – Bro. P. Thangadurai I.P.S

District Revenue Officer  – Bro. Sadhanaikural

Sub Collector  – Sis. Priyanga

மக்களவைத் தொகுதி – கிருஷ்ணகிரி

சட்டமன்றத் தொகுதி – ஊத்தங்கரை

மக்களவை உறுப்பினர் – Bro. K. Gopinath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Tamilselvam (MLA)

Municipality Commissioner – Bro. T.KRISHNAMURTHI

Chairman – Sis. FARIDA NAWAB. B

Vice – Chairman – Sis. SAVITHIRI  KADALARASU  MOORTHY

Principal District and Sessions Judge  – Bro. S.Kumaraguru (Krishnagiri)

Subordinate Judge – Sis. G.KALAIVANI (Uthangarai)

District Munsif – Bro. G.AMAR ANAND (Uthangarai)

Judicial Magistrate – Sis. S. SAHAANA (Uthangarai)

ஜெபிப்போம்

ஊத்தங்கரை (Uthangarai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஊத்தங்கரை ஒரு கல்வி நகரம் என அழைக்கப்படுகின்றது. இங்கு உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பள்ளிகள் போட்டி போட்டு தேர்ச்சி சதவீதத்தையும் மாநில அளவிலான மதிப்பெண்களையும் பெற முந்துகின்றனர்.

ஊத்தங்கரையில் கிடைத்திருக்கும் 13-14-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, ஆடையூர் நாட்டு எயில் நாட்டு தென்பற்று ஊர்கரை மேனோக்கிய மரமும் என்ற வரியில் இந்த ஊரின் பெயர் குறிக்கபட்டுள்ளது. இதன்படி இந்த ஊர் அக்காலத்தில் ஊர்கரை என்று அழைக்கப்பட்டது தெரியவருகிறது. காலப்போக்கில் இது ஊத்தங்கரை என்று மருவியுள்ளது.

ஊத்தங்கரை வட்டம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஊத்தங்கரை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 185 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

ஊத்தங்கரை வட்டமானது மேற்கில் இதே மாவட்டத்தின் போச்சம்பள்ளி வட்டம், தருமபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியையும், வட பகுதி ஆந்திர மாநிலத்தையும், கிழக்கில் திருப்பத்தூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஆகியவற்றையும், தெற்கில் தருமபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

இவ்வட்டத்தின் மக்கள்தொகை 213,291 ஆகும். அதில் 109,684 ஆண்களும், 103,607 பெண்களும் உள்ளனர். 52,743 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 91.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23376 ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.99%, இசுலாமியர்கள்4.36%, கிறித்தவர்கள் 0.56% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர். ஊத்தங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 85.11 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90.58%, பெண்களின் கல்வியறிவு 79.45% ஆகும்.

இந்த நகராமானது ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Tamilselvam அவர்களுக்காகவும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. K. Gopinath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கிற பணியில் கர்த்தர் இவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்தும்படி ஜெபிப்போம். இவர்கள் எடுக்கிற காரியங்களை கர்த்தர் வாய்க்கசெய்யும்படி ஜெபிப்போம்.ஊத்தங்கரை நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை தாலுகாவில் 183 கிராமங்கள் உள்ளன. இந்த நகரத்தில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்காக அவர்களின் பணிக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களையும் அவர்களுடைய குடும்பங்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

ஊத்தங்கரை பேரூராட்சி ஒரு கல்வி நகரம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பள்ளிகள் போட்டி போட்டு தேர்ச்சி சதவீதத்தையும் மாநில அளவிலான மதிப்பெண்களையும் பெற முந்திக்கொண்டு வருகிறார்கள். இந்த நகரத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் பெலத்தையும் கொடுத்து கர்த்தர் அவர்களை பாதுகாத்துக்கொள்ளும்படி ஜெபிப்போம். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

ஊத்தங்கரை நகரத்திற்காக ஜெபிப்போம். ஊத்தங்கரையில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் காணப்படுகின்ற பொருளாதார தேவைகள் சந்திக்கப்படவும், குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாகும்படி ஜெபிப்போம். ஊத்தங்கரையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிபபோம். ஊத்தங்கரை நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.