Daily Updates

தினம் ஓர் ஊர் – உடுமலைப்பேட்டை (Udumalaipettai) – 21/09/24

தினம் ஓர் ஊர் – உடுமலைப்பேட்டை (Udumalaipettai)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பூர்

மக்கள் தொகை – 237,861

கல்வியறிவு – 78.94%

District Collector  – Bro. T Christuraj , I.A.S

District Revenue Officer  – Bro. K Karthikeyan

Commissioner of Police  – Sis. Lakshmi IPS

Superintendent of Police  – Bro. Abhishek Gupta IPS

Municipal Commissioner – Bro. P.Balamurugan

Municipal Chairman – Bro. M.Matheen

Revenue Inspector – Bro. Kathirvel (Udumalpet)

Revenue Inspector – Bro. Mohan.M (Udumalpet)

மக்களவைத் தொகுதி – பொள்ளாச்சி

சட்டமன்றத் தொகுதி – உடுமலைப்பேட்டை

மக்களவை உறுப்பினர் – Bro. Eswaraswami (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. Radhakrishnan (MLA)

Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)

District Munsif  – Bro. V.S.Balamurugan (Udumalpet)

Sub Judge  – Bro. M.Manikandan (Udumalpet)

ஜெபிப்போம்

உடுமலைப்பேட்டை (Udumalaipettai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சிதான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும்.

உடுமலைப்பேட்டை நகராட்சியானது 1918 – ம் ஆண்டு முதன்முதலில் நகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. மேலும் நகராட்சி 1970 இல் இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இது 1979 இல் முதல் தர நகராட்சியாக அறிவிக்கப்பட்டது மற்றும் 1984 இல் தேர்வு தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. நகராட்சியின் பரப்பளவு 7.41 கிமீ 2 இதில் 6.582 கிமீ 2 ஆகும். நகர்ப்புறம் மற்றும் 0.828 கிமீ 2 கிராமப்புறம் ஆகும்.

உடுமலைப்பேட்டை வட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 5 உள்வட்டங்களும், 75 வருவாய் கிராமங்களும் உள்ளது. இவ்வட்டத்தில் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த நகராட்சி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Municipal Commissioner Bro. P.Balamurugan அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. M.Matheen அவர்களுக்காகவும், Revenue Inspectors Bro. Kathirvel மற்றும் Bro. Mohan.M அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகராட்சி உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் Bro. K. Radhakrishnan அவர்களுக்காகவும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் Bro. Eswaraswami அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இவ்வட்டம் 237,861 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 118,141 ஆண்களும், 119,720 பெண்களும் உள்ளனர். 68,008 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 55.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.25%, இசுலாமியர்கள் 5.49%, கிறித்தவர்கள் 2.05% மற்றும் பிறர் 0.22% ஆகவுள்ளனர்.

உடுமலைப்பேட்டையில்தான் தமிழக அரசின் சார்பில் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலையின்மூலம் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சர்க்கரை தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. வெளிமாவட்டங்களுக்கு சர்க்கரை ஏற்றி செல்ல ஆலையின் அருகாமையிலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. உடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன.

உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள காய்கறி சந்தையானது கொங்கு நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய காய்கறி சந்தை ஆகும். ஒட்டன்சத்திரம், திருப்பூர் காய்கறி சந்தைக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய சந்தை ஆகும். சுற்றுவட்டார பகுதிகளான பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, மடத்துக்குளம், பழநி, தாராபுரம், குண்டடம், செஞ்சேரிமலை, பூளவாடி ஆகிய வட்டாரங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இந்த காய்கறி சந்தையில் நேரடியாக மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாகவும் விற்கப்படுகிறது.

உடுமலைப்பேட்டையில் சுமார் பதினைந்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சில கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அரசு மற்ற தனியார் பள்ளிகளுடன் இணைந்து மேல்நிலைப் பள்ளிகளை நடத்துகிறது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளிகள் சங்கம் நடத்தும் சைனிக் பள்ளி , நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமராவதி நகரில் அமைந்துள்ளது.

உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயம் மற்றும் ஜவுளித் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. தென்னை, சோளம், தினை, கரும்பு மற்றும் நெல் ஆகியவை இப்பகுதியில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள். கணிசமான எண்ணிக்கையிலான விவசாயிகள் பால் மற்றும் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

உடுமலைப்பேட்டை நகரத்திற்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். உடுமலைப்பேட்டை பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். உடுமலைப்பேட்டை நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.