No products in the cart.
தினம் ஓர் ஊர் – இளம்பிள்ளை (Elampillai) – 02/09/24
தினம் ஓர் ஊர் – இளம்பிள்ளை (Elampillai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
தாலுகா – சேலம் தெற்கு (Salem South)
பரப்பளவு – 2.76 சதுர கிலோமீட்டர்கள் (1.07 sq mi)
மக்கள் தொகை – 11,797
கல்வியறிவு – 83.96 %
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Salem Municipality Commissioner – Bro. Y.Surendiran
Salem Mayor – Bro. A. Ramachandran
Deputy Mayor – Sis. Saradha Devi
மக்களவைத் தொகுதி – சேலம்
சட்டமன்றத் தொகுதி – வீரபாண்டி
மக்களவை உறுப்பினர் – Bro. Tm Selvaganapathi (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. K. Tharun
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
ஜெபிப்போம்
இளம்பிள்ளை (Elampillai) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு 28 ஏக்கர் நிலபரப்பில் இளம்பிள்ளை ஏரி உள்ளது. விரைவில் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
இளம்பிள்ளை அபூர்வா பட்டு நெசவுத் தொழில் பிரபலமானது. இந்த நகரம் பட்டுப் புடவைகள் போன்ற ஜவுளிகளுக்கும் மற்றும் ஜாக்கார்ட் பஞ்சிங் மற்றும் சேலை டிசைனிங் போன்ற பிற தொடர்புடைய வேலைகளுக்கும் பெயர் பெற்றது.
இப்பேரூராட்சி வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. A. K. Tharun அவர்களுக்காகவும், சேலம் மக்களவை உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இளம்பிள்ளை நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்து 11,797 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது, இதில் 6,013 ஆண்கள் மற்றும் 5,784 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 3,057 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.40%, முஸ்லீம்கள் 3.16%, கிறிஸ்தவர்கள் 0.41% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.
இளம்பிள்ளையின் சராசரி கல்வியறிவு 83.96% ஆகும், இது மாநில சராசரியான 80.09% ஐ விட அதிகம்: ஆண்களின் கல்வியறிவு 89.89%, பெண்களின் கல்வியறிவு 77.79%. இளம்பிள்ளையில், 9.54% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். இந்த நகரத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இளைஞரான திருமூலருக்கு வாய்த்த சீடரோ தொண்டுகிழம். காலாங்கிநாதர் என்னும் அக்கிழவர் கலிங்கத்தில் இருந்து வந்தவர். காயம் உடலை மூப்படையாது கல்லாக மாற்றி எப்பொழுது இளமைநலம் நல்கும் காயகல்பத்தைத் தேடி குருவான திருமூலர் காட்டிற்குள் சென்றுவிட்டார். குருவுக்கு சீடர் உணவாக்கத் தொடங்கினார். உணவு அடிப்பிடித்துவிடக்கூடாதே என கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அவ்வுணவை கிண்டத் தொடங்கினார். உணவு கருகிவிட்டதால் பதறிப்போன சீடர் அவ்வுணவைக் கீழே இறக்கிவைத்துவிட்டு குருக்கு புது உணவை ஆக்கினார். கருகிய உணவு வீணாகிவிடக்கூடாதே என அதனை எடுத்து சீடர் உண்டார். அதனை உண்டுமுடித்ததும் கிழவரான காலாங்கிநாதர் இளம்பிள்ளையாக மாறிவிட்டார். அவ்வாறு அவர் உருமாறிய இடமே இளம்பிள்ளை என்னும் ஊர்.
இளம்பிள்ளையின் பொருளாதாரம் முக்கியமாக ஜவுளித் தொழிலைச் சார்ந்திருக்கிறது. சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை சந்தைப்படுத்துவதற்கான மையமாக இது செயல்படுகிறது. இளம்பிள்ளை இரும்புத் தாதுக்களுக்குப் பிரபலமானது. இளம்பிள்ளை பாரம்பரிய மற்றும் ஆடம்பரமான புடவைகளுக்கு பிரபலமானவர். இங்கு உள்ள மக்கள் கைநெசவுத் தொழில் மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.இப்போது விசைதறி மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.
இளம்பிள்ளை பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் நெசவுத்தொழில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். கைநெசவுத் தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இளம்பிள்ளை பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.