No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஆவுடையார்கோயில் (Auvdaiyarkoil)
தினம் ஓர் ஊர் – ஆவுடையார்கோயில் (Auvdaiyarkoil)
மாவட்டம் – புதுக்கோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 87,250
கல்வியறிவு – 79.07%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – அறந்தாங்கி
மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta
மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R
Chief Judicial Magistrate – Bro. K.S.Paulpandian (Pudukkottai)
Principal Subordinate Judge – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)
ஜெபிப்போம்
ஆவுடையார்கோயில் (Auvdaiyarkoil) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆவுடையார்கோயில் நகரம் உள்ளது. ஆவுடையார்கோயில் நகரத்தின் பழைய பெயர் திருப்பெருந்துறை ஆகும்.
இந்த வட்டத்தின் கீழ் பொன்பெத்தி, மீமிசல், ஏம்பல், ஆவுடையார்கோயில் என 4 உள்வட்டங்களும், 96 வருவாய் கிராமங்களும் உள்ளன. மேலும் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இவ்வூரில் உள்ளது. இந்த நகரம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
ஆவுடையார்கோயில் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 87,250 ஆகும். இதில் 43,759 ஆண்களும், 43,491 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 21,356 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 77.58%, இசுலாமியர்கள் 12.5%, கிறித்தவர்கள் 9.84% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர். ஆவுடையார்கோயில் தாலுகாவின் கல்வியறிவு விகிதம் 70.73% ஆக உள்ளது. இதில் 77.77% ஆண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர், 63.65% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
ஆவுடையார்கோயில் தாலுகாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்களின் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும் வழிநடத்தலும் இவர்களோடும், இவர்களுடைய குடும்பதினர்களோடும் இருக்கும்படி ஜெபிப்போம். தொழில்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.
ஆவுடையார்கோயில் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். ஆவுடையார்கோயில் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.