Daily Updates

தினம் ஓர் ஊர் – ஆலாந்துறை (Alanthurai) – 23/11/24

தினம் ஓர் ஊர் – ஆலாந்துறை (Alanthurai)

மாவட்டம் – கோயம்புத்தூர்

மாநிலம் – தமிழ்நாடு

வட்டம் – பேரூர்

பரப்பளவு  – 21.68 சதுர கிலோமீட்டர்கள் (8.37 sq mi)

மக்கள் தொகை – 8,004

கல்வியறிவு – 84.00 %

District Collector  –  Bro. Kranthi Kumar Pati I.A.S.

District Revenue Officer – Sis. M. Sharmila

Commissioner of Police  – Bro. V. Balakrishnan I.P.S. (Coimbatore)

Commissioner Corporation of Coimbatore  – Bro. Sivaguru Prabakaran I.A.S.

Revenue Divisional Officer – Bro. P.K. Govindan Coimbatore (North)

Revenue Divisional Officer  – Bro. Pandarinathan Coimbatore (South)

மக்களவைத் தொகுதி – பொள்ளாச்சி

சட்டமன்றத் தொகுதி – தொண்டாமுத்தூர்

மக்களவை உறுப்பினர் – Bro. Eswaraswami (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.P. Velumani (MLA)

Mayor – Sis. R. Ranganayaki

Deputy Mayor – Bro. Vetrichelvan

Principal District Judge  – Sis. G. Vijaya (Coimbatore)

ஜெபிப்போம்

ஆலாந்துறை (Alanthurai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். துறை என்பது ஆற்றங்கரையில் அமைந்த ஊர்களைக்குறிக்கும். நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த காரணம் பற்றி இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோவை – சிறுவாணி செல்லும் பாதையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆலந்துறை பேருராட்சி அமைந்துள்ளது. இது கோயம்புத்தூருலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், பூளுவப்பட்டி 2 கிமீ, பூண்டி 10 கிமீ, தொண்டாமுத்தூர் 8 கிமீ தொலைவில் உள்ளது.

இது நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இப்பேருராட்சி பகுதியில் உள்ள பூண்டி அருகில் வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயில், ஈஷா யோக மையம் மற்றும் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது. சுற்றுலா தலங்களான கோவை குற்றாலம் மற்றும் சிறுவாணி அணை இப்பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த பேரூராட்சி கோவையின் மேற்கு புறநகரில் அமைந்துள்ளது, இது கோவை மாநகராட்சியின் கீழ் வருகிறது. இப்பேரூராட்சியானது 21.68 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 35 தெருக்களும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S.P. Velumani அவர்களுக்காகவும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் Bro. Eswaraswami அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஆலந்துறை டவுன் பஞ்சாயத்தில் 7,221 மக்கள் தொகை உள்ளது, இதில் 3,547 ஆண்கள் மற்றும் 3,674 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 2004 குடும்பங்கள் வசிக்கிறார்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 589 ஆகும், ஆலந்துறையில் ஆண்களின் கல்வியறிவு 74.63% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 62.16% ஆகவும் உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள்  97.22%, முஸ்லீம்கள்  0.72%,  கிறிஸ்தவர்கள் 1.73% உள்ளனர்.

ஆலாந்துறை பேரூராட்சியில் வேளாண்மை முதன்மை தொழிலாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 3,967 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,384 ஆண்கள் மற்றும் 1,583 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

ஆலாந்துறை பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். ஆலாந்துறை நகரத்தில் வாழும் விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். ஆலாந்துறை பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.