No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஆலத்தம்பாடி (Alathampadi) – 16/12/23
தினம் ஓர் ஊர் – ஆலத்தம்பாடி (Alathampadi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவாரூர்
மக்கள் தொகை – 3087
கல்வியறிவு – 83.20%
மக்களவைத் தொகுதி – நாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதி – திருத்துறைப்பூண்டி
District Collector – Sis. T.Charusree (I.A.S)
Additional Collector (Development) /
Project Director – Sis. S. Priyanka (I.A.S)
The Superintendent of Police – Bro. S. Jeyakumar (I.P.S)
District Revenue Officer – Bro. K.Shanmuganathan
மக்களவை உறுப்பினர் – Bro. M.Selvarasu (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.Marimuthu (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. S.Prabakaran
நகராட்சி தலைவர் – Sis. P.Kavitha Pandian
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Jayaprakash
Revenue Inspector – Bro. C.Karthikeyan (Thiruthuraipoondi)
Chief Judicial Magistrate – Bro.T.Balamurugan (Tiruvarur)
ஜெபிப்போம்
ஆலத்தம்பாடி ஊராட்சி (Alathampadi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது. கிறிஸ்தவ மத ஸ்தலமான வேளாங்கண்ணி தேவாலயம் 35 கி.மீ தொலைவில் உள்ளது. 40 கி.மீ தொலைவில் உள்ள நாகூர் தர்கா புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் மத ஸ்தலமாகும். ஆலத்தம்பாடி ஊராட்சியத்திற்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
இந்த ஊராட்சி, திருத்துறைபூண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. K.Marimuthu அவர்களுக்காகவும், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் Bro. M.Selvarasu அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும், வழிநடத்தலும் இவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம்.
ஆலத்தம்பாடி ஊராட்சியின் நகராட்சி ஆணையர் Bro. S.Prabakaran அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. P.Kavitha Pandian அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Jayaprakash அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணியினை உண்மையாகவும், தேவ பயத்தோடு செய்யவும் ஜெபிப்போம்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நகரத்தின் ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
ஆலத்தம்பாடி ஊராட்சியின் மக்கள் தொகை 3244 ஆகும். இதில் ஆண்கள் 1598, பெண்கள் 1646 பேர் உள்ளனர். இங்கு மொத்தம் 909 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆலத்தம்பாடியில் ஆண்களின் கல்வியறிவு 89.72% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 76.98% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
இந்த ஊராட்சியில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். இங்குள்ள விவசாய மக்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஆலத்தம்பாடி ஊராட்சியில் 155 குடிநீர் இணைப்புகள், 22 கைக்குழாய்கள், 9 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 19 உள்ளாட்சிக் கட்டடங்கள், 1 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 18 ஊரணிகள் அல்லது குளங்கள், 81 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 22 ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
ஆலத்தம்பாடி ஊராட்சிக்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தைகள் விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.