No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஆடுதுறை (Aduthurai) – 28/12/23
தினம் ஓர் ஊர் – ஆடுதுறை (Aduthurai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தஞ்சாவூர்
மக்கள் தொகை – 11,705
கல்வியறிவு – 88.2%
மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை
சட்டமன்றத் தொகுதி – திருவிடைமருதூர்
District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)
Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)
Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)
Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)
District Revenue Officer – Bro. T.Thiyagarajan
மக்களவை உறுப்பினர் – Bro. S.Ramalingam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Govai.Chezhian
Mayor – Bro. Sun. Ramanathan
Commissioner & Special Officer – Sis. R. Maheshwari
Vice Mayor – Sis. Anjugam Boopathy
Principal District Judge – Sis. Jacintha Martin (Thanjavur)
Presiding Officer and
Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)
District Munsif cum Judicial Magistrate – Bro. N.Sivapalani
ஜெபிப்போம்
ஆடுதுறை (Aduthurai) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் ஓர் பேரூராட்சி ஆகும். இதனை மருத்துவக்குடி என்றும் அழைப்பர். இது கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. ஆடுதுறை பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
ஆடுதுறை பேரூராட்சிக்கு அருகில் ஆவணியாபுரம், மஞ்சமல்லி, கிள்ளுக்குடி, சாத்தனூர், மேலமருத்துவக்குடி, கீழ மருத்துவக்குடி, வானாதிராஜபுரம், திருமங்கலக்குடி, நரசிங்கன்பேட்டை, தியாகராஜபுரம், சூரியனார் கோவில், போன்ற கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்காகவும், கிராமத்தில் உள்ள மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
தஞ்சாவூர் District Collector Bro. Deepak Jacob அவர்களுக்காகவும், Additional Collector Bro. H.S.Srikanth அவர்களுக்காகவும், Deputy Inspector General of Police Bro. T.Jayachandran அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. Ashish Rawat அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. T.Thiyagarajan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினர் Bro. Govai.Chezhian அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Bro. S.Ramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்பினை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.
ஆடுதுறை என்ற மருதுவாக்குடி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் Commissioner & Special Officer Sis. R. Maheshwari அவர்களுக்காகவும், தஞ்சாவூர் நகரத்தின் Mayor Bro. Sun. Ramanathan அவர்களுக்காகவும், Vice Mayor Sis. Anjugam Boopathy அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஆடுதுறையின் மொத்த மக்கள் தொகை 11,705 ஆகும். இதில் 5,858 ஆண்கள் மற்றும் 5,847 பெண்கள் ஆவார்கள். இந்த நகரில் மொத்தம் 2,838 குடும்பங்கள் வசிக்கின்றன. இது மொத்த மக்கள் தொகையில் 10% ஆகும். 0-6 வயதுக்குட்பட்ட 620 ஆண் குழந்தைகளும் 570 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும் அவர்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
ஆடுதுறை அல்லது மருதுவாக்குடியின் கல்வியறிவு விகிதம் 88.2% ஆகும். இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தின் 82.6% கல்வியறிவு விகிதத்துடன் ஒப்பிடும்போது ஆடுதுறை அல்லது மருதுவாக்குடி அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. ஆடுதுறையில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 93.11% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 83.38% ஆகவும் உள்ளது. இந்த பேரூராட்சியில் படிக்கும் பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஆடுதுறை டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில் 4,372 பேர் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ள 4,372 தொழிலாளர்களில், 235 பேர் விவசாயிகள் மற்றும் 1,147 பேர் விவசாயத் தொழிலாளர்கள். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழிலுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் அவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம்.