No products in the cart.

தினம் ஓர் ஊர் – அழகியபாண்டியபுரம்(Azhagiapandiapuram) – 31/08/23
தினம் ஓர் ஊர் – அழகியபாண்டியபுரம்(Azhagiapandiapuram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 11392
கல்வியறிவு – 83.71%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – கன்னியாகுமரி
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thalavai Sundaram (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
அழகியபாண்டியபுரம் (Azhagiapandiapuram), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது பழையார் பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ளது. இது தோவாளை தாலுக்காவின் நான்கு நகர பஞ்சாயத்துகளில் ஒன்றாகும். சங்க காலத்தில் இப்பகுதியை ஆண்ட பாண்டிய தலைவன் அழகியபாண்டியனின் பெயரால் அழகியபாண்டியபுரம் என்ற பெயர் உருவானது. அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
எட்டமடை, கேசவன்புதூர், மேல்கரை, பெருந்தலைக்காடு, குறத்தியறை, தோமையார்புரம், பால்குளம் ஆகியவை இந்த ஊரின் துணை கிராமங்களாகும். வடக்கே அசம்பு காப்புக்காடு, தெற்கே தெரிசனம்கோப் மற்றும் திட்டுவிளை, கிழக்கே கடுக்கரை மற்றும் காட்டுப்புத்தூர், தென்மேற்கில் சிரமடம், மேற்கே ஞானளம் மற்றும் வடமேற்கில் அருமநல்லூர் ஆகிய இடங்கள் அருகாமையில் அமைந்துள்ளன. அழகியபாண்டியபுரம் அருகில் உள்ள கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம்.
அழகியபாண்டியபுரம் பேரூராட்சி திருவனந்தபுரம் பெருநகரப் பகுதியில் இருந்து தென்கிழக்கே 70 கி.மீ தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; நாகர்கோவிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள் ஆரல்வாய்மொழி 10 கிமீ; சுருலோடு 15 கிமீ; தாடிக்காரன்கோணம் 5 கிமீ; திட்டுவிளை 5 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thalavai Sundaram அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பகளுக்காக ஜெபிப்போம்.
அழகியபாண்டியபுரம் பேரூராட்சி 10.24 கிமீ பரப்பளவும், 47 தெருக்களும், 3146 வீடுகளும் கொண்டுள்ளது. இந்த நகரம் 15 வார்டு உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை நேர்மையோடு செய்ய ஜெபிப்போம்.
அழகியபாண்டியபுரம் நகரத்தில் மொத்தம் 11,392 மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% இதில் பெண் மக்கள்தொகை ஆண் மக்கள்தொகையை விட அதிகம். அழகியபாண்டியபுரம் சராசரி கல்வியறிவு விகிதம் 83.71% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 85.02% மற்றும் பெண்களின் கல்வியறிவு 82.40% ஆகும். மக்கள்தொகையில் முறையே 4.50% மற்றும் 0.15% பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 3146 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இநத் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரம் வழிநடத்திட ஜெபிப்போம்.
அழகியபாண்டிபுரம் டவுன் பஞ்சாயத்தில் எட்டமடை வர்த்தக மையம் உள்ளது. எட்டமடையில் உள்ள புனித குடும்ப தேவாலயம் ஒரு மலையால் பாதுகாக்கப்படுகிறது. உலகை அருவி (உலக்கை அருவி) மற்றொரு சுற்றுலா தலமாகும். அழகியபாண்டிபுரம் கிராமம் தெற்கே தவிர அனைத்து பக்கங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள சுற்றுலா தலங்களுக்காக ஜெபிப்போம்.