Daily Updates

தினம் ஓர் ஊர் – அம்மாப்பேட்டை (Ammapettai) – 19/01/24

தினம் ஓர் ஊர் – அம்மாப்பேட்டை (Ammapettai)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தஞ்சாவூர்

மக்கள் தொகை – 14,572

கல்வியறிவு – 84.5%

மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை

சட்டமன்றத் தொகுதி – பாபநாசம்

District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)

Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)

Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)

Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer – Bro. T.Thiyagarajan

மக்களவை உறுப்பினர் – Bro. S.Ramalingam (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. M.H.Jawahirullah (MLA)

Mayor, Thanjavur City Municipal Corporation – Bro. Sun. Ramanathan

Commissioner & Special Officer,

Thanjavur City Municipal Corporation – Sis. R. Maheshwari

Vice Mayor – Sis. Anjugam Boopathy

Principal District Judge  – Sis. Jacintha Martin (Thanjavur)

Presiding Officer and

Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)

District Munsif-cum-Judicial Magistrate – Bro. A.Abdhul Kani

ஜெபிப்போம்

அம்மாப்பேட்டை (Ammapettai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அம்மாபேட்டை பேரூராட்சிக்கு கிழக்கே திருவாரூர் 40 கிமீ; மேற்கே தஞ்சாவூர் 22 கிமீ; வடக்கே கும்பகோணம் 25 கிமீ; தெற்கே ஒரத்தநாடு 24 கிமீ; மன்னார்குடி 23 கிமீ தொலைவில் உள்ளது. அம்மாப்பேட்டை பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M.H.Jawahirullah அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Bro. S.Ramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வல்லமையான கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 7.5 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. மேலும் அம்மாபேட்டை நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Thanjavur Mayor Bro. Sun. Ramanathan அவர்களுக்காகவும், Thanjavur Commissioner & Special Officer Sis. R. Maheshwari அவர்களுக்காகவும், Vice Mayor Sis. Anjugam Boopathy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.

அம்மாபேட்டையின் மொத்த மக்கள் தொகை 14,572 ஆகும். இதில் 7,104 ஆண்கள் மற்றும் 7,468 பெண்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியில் மொத்தம் 3,591 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள் தொகையில் இந்து 81.57% பேரும், முஸ்லிம் 12.56% பேரும், கிறிஸ்டியன் 5.71% பேரும், சீக்கியர் 0.02% பேரும், ஜெயின் 0.01% பேரும், பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.02% பேரும் உள்ளனர். அம்மாபேட்டையில் வாழும் மக்களுக்காகவும், அவர்களுடைய இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் குடும்பங்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.

அம்மாபேட்டையின் கல்வியறிவு விகிதம் 84.5% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 89.04% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 80.28% ஆகவும் உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்புக் கரம் இவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம்.

அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில், 5,227 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 593 பேர் விவசாயிகள் மற்றும் 1,190 பேர் விவசாயத் தொழிலாளர்கள். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கன் கையிட்டு செய்கின்ற அனைத்து வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

அம்மாபேட்டை பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.  சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள மக்கள் குடும்பமாய் தேவனை ஆராதிக்கும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.