Daily Updates

தினம் ஓர் ஊர் – அபிராமம் (Abiramam) – 24/03/25

தினம் ஓர் ஊர் – அபிராமம் (Abiramam)

மாவட்டம் – இராமநாதபுரம்

வட்டம் – கமுதி

மாநிலம் – தமிழ்நாடு

பரப்பளவு – 64.71 மீட்டர்கள் (212.3 அடி)

மக்கள் தொகை – 8,144

கல்வியறிவு – 77.33%

மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்

சட்டமன்றத் தொகுதி – முதுகுளத்தூர்

மாவட்ட ஆட்சியர் – Bro. Simranjeet Singh Kahlon I.A.S.

Superintendent of Police  – Bro. G.Chandeesh I.P.S.

Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,

Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.,

District Revenue Officer – Bro. R. Govindarajalu

Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)

District Munsif cum Judicial Magistrate – Sis. J.Sangeetha (Kamuthi)

ஜெபிப்போம்

அபிராமம் (Abiramam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். பரமக்குடி – கமுதி சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது. முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில் (ரங்கூன்) தொழில் செய்து வந்தனர். இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது.

அபிராமம் நகரம் 15 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இது 3.83 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அபிராமம் பேரூராட்சியின் மக்கள் தொகை 8,144 ஆகும், இதில் 4,011 ஆண்கள் மற்றும் 4,133 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 888 ஆகும், இது அபிராமத்தின் (TP) மொத்த மக்கள் தொகையில் 10.90% ஆகும். அபிராமத்தில், ஆண்களின் எழுத்தறிவு விகிதம் சுமார் 96.26% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 90.76% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்து 63.13%, முஸ்லிம் 36.22%, கிறிஸ்தவர் 0.52% மற்றும் சீக்கியர் 0.09% உள்ளனர்.

அபிராமம் பேரூராட்சி 1,930 வீடுகளுக்கு மேல் நிர்வாகத்தைக் கொண்டுள்ளது, அவற்றுக்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குகிறது. மொத்த மக்கள்தொகையில், 2,519 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,073 பேர் ஆண்கள், 446 பேர் பெண்கள் உள்ளனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். பொருதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

அபிராமம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். அபிராமம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். அபிராமம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.