bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Daily Updates

தினம் ஓர் ஊர் – அகத்தீஸ்வரம் (Agastheeswaram) – 23/08/23

தினம் ஓர் ஊர் – அகத்தீஸ்வரம் (Agastheeswaram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கன்னியாகுமரி

மக்கள் தொகை – 550,283

கல்வியறிவு – 85.63%

மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி

சட்டமன்றத் தொகுதி – கன்னியாகுமரி

மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)

துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)

District Revenue Officer – Bro. J.Balasubramaniam

District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)

Joint Director / Project Director – Bro. P.Babu

Revenue Officer (Nagercoil) – Bro. K.Sethuramalingam

மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thalavai Sundaram (MLA)

மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan

Principal District Court – Bro. S.Arulmurugan

ஜெபிப்போம்

அகத்தீஸ்வரம் (Agastheeswaram) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன. இது நாகர்கோவிலிருந்து 20 கி.மீ.; கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ.; கொட்டாரத்திலிருந்து 2 கி.மீ.; கோவளத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்தீஸ்வரம் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

அகஸ்தீஸ்வரம் தாலுக்கா சமஸ்தான திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது; பிந்தையது பின்னர் அப்போதைய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1956 ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி மொழியியல் இணைப்புகளில் மாநில எல்லைகளை சீரமைத்தது. தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்கள் திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம், சென்னை மாநிலத்திற்கு மாற்றப்பட்டன. மெட்ராஸ் பின்னர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

அகஸ்திய முனிவர் இங்கு ராமாயணம் கற்பிக்க வந்ததால் அகஸ்தீஸ்வரம் எனப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் நன்கு படித்தவர்கள். அகஸ்தீஸ்வரத்தில் விவேகானந்தா கல்லூரி உள்ளது. தோவாளை, கல்குளம், இரணியல் மற்றும் வேலவன்கோடு தாலுகாக்களுடன், அகஸ்தீஸ்வரம் 1949 இல் கொச்சியுடன் இணையும் வரை பழைய திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்குப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் 12 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. அகஸ்தீஸ்வரம் ஊராட்சி மன்றங்களுக்காகவும், ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thalavai Sundaram அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் கடமையை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம்.

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி 2278.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 15 வார்டுகளும், 23 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியின் மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காகவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த தாலுகாவில் மொத்தம் 550,283 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில்  271,936 ஆண்கள் மற்றும் 278,347 பெண்கள்  இருக்கிறார்கள். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 24,950 ஆண்கள் மற்றும் 24,164 பெண்கள். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற எல்லா வேலைகளிலும் கர்த்தருடைய கரம் அவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குழந்தைகளுக்காக, சிறுபிள்ளைகளுக்காக, வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கொடுத்து பாதுகாத்திட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.