Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – சோஹாக் (Sohag)

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – சோஹாக் (Sohag)

நாடு (Country) – எகிப்து (Egypt)

கண்டம் (Continent) – ஆப்பிரிக்கா (Africa)

மக்கள் – Sohagi

மக்கள் தொகை – 5,853,394

அலுவலக மொழி – Egyptian Arabic

அரசாங்கம் – சர்வாதிகார ஆட்சியின் கீழ் அரசு

ஒற்றையாட்சி அரை ஜனாதிபதி குடியரசு

President – Abdel Fattah el-Sisi

Prime Minister – Mostafa Madbouly

Governor – Abdel-Fattah Noureldin Serag

மொத்த பரப்பளவு  – 1,547 km2 (597 sq mi)

தேசிய பறவை – Steppe Eagle

தேசிய மலர் – Egyptian Lotus

தேசிய மரம் – Doum palm

தேசிய விளையாட்டு – Football

நாணயம் – Egyptian Pound

ஜெபிப்போம்

சோஹாக் (Sohag) என்பது மேல் எகிப்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆளுநரகமாகும். இந்த ஆளுநரகத்தை எகிப்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் நிர்வகிப்பார். இதன் தலைநகரம் சோஹாக் நகரம்.

கோதுமை, வெங்காயம், பீன்ஸ் மற்றும் பருத்தி போன்ற பாரம்பரிய பயிர்களுக்கும், விலங்கு மற்றும் கோழி உற்பத்திக்கும் சோஹாக் ஆளுநரகம் பிரபலமானது. மேலும், கரும்பு சாகுபடியில் கியூனாவுக்குப் பிறகு இது இரண்டாவது இடத்தில் உள்ளது. கம்பள வர்த்தகம், நெசவு, நூற்பு, தளபாடங்கள் தயாரித்தல், சமையல் எண்ணெய், சவர்க்காரங்கள் மற்றும் சர்க்கரை உற்பத்தி ஆகிய பல்வேறு சிறு தொழில்கள் இங்கு உண்டு. இந்த ஆளுநரகத்தில் வறுமை விகிதம் 60%க்கும் அதிகமாக உள்ளது.

சோஹாக்கில் நினைவுச்சின்னங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள்: சேட்டி I கோயில், ஓசிரியன் கல்லறை, ராம்செஸ் II கோயில், மெரிட் அமோன் சிலை, உம்முல்-காபின் கல்லறைகள், அல்-ஹவாவோயிச் கல்லறைகள், அல்-அஹ்ஜர்ஷ் கல்லறைகள் ஆகிய பாரோனிக் நினைவுச் சின்னங்களும், எல்-அதிக் மசூதி, சிடி ஆரிஃப் மசூதி, இளவரசர் ஹாசன் மசூதி, உஸ்மான் மசூதி, எல்-சினி மசூதி, ஜலால் மசூதி, அலி பெக் பொது குளியல் போன்ற இஸ்லாமிய நினைவுச்சின்னங்களும், மிக முக்கியமான தேவாலயங்களில் ஒன்றான வெள்ளை மடாலயமும் இங்கு உள்ளன.

சோஹாக் ஆளுநரகத்தின் President, Prime Minister, Governor ஆகியோருக்காக ஜெபிப்போம். இந்த ஆளுநரக மக்களின் இரட்சிப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார  வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த ஆளுநரகத்திலுள்ள அனைத்து திருச்சபைகளிலும் பரிசுத்த ஆவியானவரின் அக்கினி ஊற்றப்பட்டு எழுப்புதல் ஏற்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.