Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிசா (Giza)

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிசா (Giza)

நாடு (Country) – எகிப்து (Egypt)

கண்டம் (Continent) – ஆப்பிரிக்கா (Africa)

மக்கள் தொகை – 4,458,135

மக்கள் – Gizan (male) Gizanne (female)

அலுவலக மொழி – Egyptian Arabic

அரசாங்கம் – சர்வாதிகார ஆட்சியின் கீழ் அரசு

ஒற்றையாட்சி அரை ஜனாதிபதி குடியரசு

President – Abdel Fattah el-Sisi

Prime Minister – Mostafa Madbouly

Governor – Ahmed Rashed

மொத்த பரப்பளவு  – 98.4 km2 (38.0 sq mi)

தேசிய பறவை – Steppe Eagle

தேசிய மலர் – Egyptian Lotus

தேசிய மரம் – Doum palm

தேசிய விளையாட்டு – Football

நாணயம் – Egyptian Pound

ஜெபிப்போம்

கிசா (Giza) எகிப்தின் ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மையத்தில் உள்ளது, பெரும்பாலும் கெய்ரோவுக்கு எதிரே நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆளுநர் நகரத்தின் தலைவராக உள்ளார். இதன் தலைநகரம் கிசா நகரம். இது கிசாவைச் சுற்றியுள்ள நைல் பள்ளத்தாக்கின் இடது கரையின் ஒரு பகுதியையும், கிழக்குக் கரையின் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியையும் (கம்மாசா அல் குப்ரா மற்றும் எல்-சாஃப் போன்றவை) உள்ளடக்கியது.

எகிப்தில் உள்ள பிரமிடுகளில் மிகவும் பெரியது கிசா. கிசா பிரமிடுக்குள் குஃபு மன்னரின் கல்லறை இருக்கிறது. இதன் உயரம் சுமார் 455 அடியாகும். பிரமிடு அடிவாரத்தின் ஒவ்வொரு பக்கமும் சுமார் 755 அடி நீளம் கொண்டது. மேலும் கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் எகிப்து நாட்டின் கீசா நகரத்தில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள பாதி மனித உருவம் கொண்ட ஒரு பெரிய ஸ்பிங்ஸ் சிலையாகும். இது உலகில் உள்ள ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாகும். மேலும் பண்டைய எகிப்திய இராச்சிய மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய வழிபாட்டுத் தலங்கள், அருங்காட்சியகங்களால் கிசா நகரம் புகழ்பெற்றது.

கிசாவின் முக்கிய வருமான ஆதாரம் சுற்றுலா ஆகும். கிசாவில் ரசாயனங்கள் ஒரு முக்கியமான தொழிலாகும், கிசா வண்ணப்பூச்சுகள் மற்றும் வேதியியல் தொழில்கள் 1984இல் நிறுவப்பட்டன.

கிசாவின் President, Prime Minister, Governor ஆகியோருக்காக ஜெபிப்போம். கிசா மக்களின் இரட்சிப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார  வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். கிசாவிலுள்ள அனைத்து திருச்சபைகளிலும் பரிசுத்த ஆவியானவரின் அக்கினி ஊற்றப்பட்டு எழுப்புதல் ஏற்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.