No products in the cart.

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – அடமாவா (Adamawa)
தினம் ஒரு நாட்டின் மாநிலம் – அடமாவா (Adamawa)
நாடு (Country) – நைஜீரியா (Nigeria)
கண்டம் (Continent) – ஆப்பிரிக்கா (Africa)
மொத்த பரப்பளவு – 36,917 km2 (14,254 sq mi)
மக்கள் தொகை – 3,178,950
அதிகாரப்பூர்வ மொழி – English
அரசாங்கம் – கூட்டாட்சி ஜனாதிபதி குடியரசு
President – Bola Tinubu
Vice President – Kashim Shettima
Senate President – Godswill Akpabio
House Speaker – Tajudeen Abbas
Chief Justice – Kudirat Kekere-Ekun
Governor – Ahmadu Umaru Fintiri
Deputy Governor – Kaletapwa Farauta
Speaker of State Assembly – Wesley Bathiya
National Assembly delegation – Senators: N: Amos Yohanna, C: Aminu Iya Abbas, S: Binos Dauda Yaroe
தேசிய பறவை – Black Crowned Crane
தேசிய மலர் – Yellow Trumpet
தேசிய பழம் – Agbalumo
நாணயம் – Naira
ஜெபிப்போம்
அடமாவா (Adamawa) என்பது நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். இது நைஜீரியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் யோலா ஆகும்.
அடமாவா மாநில பொருளாதாரம் முக்கியமாக கால்நடைகள் தொழில் மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இங்கு பருத்தி, நிலக்கடலை, பீன்ஸ், அரிசி, தினை, மரவள்ளிக்கிழங்கு, கினி சோளம் மற்றும் கிழங்கு போன்ற பயிர்கள் உற்பத்தி ஆகிறது. மேலும் சுண்ணாம்புக்கல், டான்டலைட், மேக்னசைட், பெண்டோனைட் மற்றும் கயோலின் போன்ற கனிமங்கள் உள்ளன.
அடமாவா மாநிலம், பெனு, கோங்கோலா மற்றும் யெட்சரேம் ஆகிய பெரிய நதி பள்ளத்தாக்குகளால் கடக்கப்படும் ஒரு மலைப்பாங்கான நிலமாகும். கேமரூன் மலை, மந்தாரா மலைகள், மற்றும் அடமாவா பீடபூமியின் பள்ளத்தாக்குகள் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக அமைகின்றன. இந்த மாநிலத்தில் பிரபலமான கும்டி தேசிய பூங்கா உள்ளது. இதில் புஷ்பக், ஆப்பிரிக்க எருமை, பட்டாஸ் குரங்கு, கருப்பு-வெள்ளை கோலோபஸ், ராட்சத பாங்கோலின், நீர்யானை, நைஜீரியா-கேமரூன் சிம்பன்சி, ஆப்பிரிக்க சிறுத்தை மற்றும் ஆப்பிரிக்க தங்க பூனை ஆகிய விலங்குகள் உள்ளன.
அடமாவா மாநிலத்தின் President, Vice President, Senate President, House Speaker, Chief Justice, Governor, Deputy Governor, Speaker of State Assembly, Senators ஆகியோருக்காக ஜெபிப்போம். இந்த மாநில மக்களின் சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த மாநிலத்தில் சமீபத்திய ஆண்டுகளில், கடுமையான மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பலர் உயிர் இழந்தனர், இந்நிலை மாற ஜெபிப்போம்.