No products in the cart.

தினம் ஓர் ஊர் – வலங்கைமான் (Valangaiman) – 01/12/23
தினம் ஓர் ஊர் – வலங்கைமான் (Valangaiman)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவாரூர்
மக்கள் தொகை – 100,645
கல்வியறிவு – 79.04%
மக்களவைத் தொகுதி – நாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதி – நன்னிலம்
District Collector – Sis. T.Charusree (I.A.S)
Additional Collector (Development) /
Project Director – Sis. S. Priyanka (I.A.S)
The Superintendent of Police – Bro. S. Jeyakumar (I.P.S)
District Revenue Officer – Bro. K.Shanmuganathan
மக்களவை உறுப்பினர் – Bro. M.Selvarasu (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. R.Kamaraj (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. Malligha
நகராட்சி தலைவர் – Sis. S.Bhuvanapriya
நகராட்சி துணை தலைவர் – Sis. S.Akila
Chief Judicial Magistrate – Bro.T.Balamurugan (Tiruvarur)
District Munsif Cum Judicial Magistrate – Bro. M.S M.S. Bharathidhasan
ஜெபிப்போம்
வலங்கைமான் (வலங்கிமான் என்றும் உச்சரிக்கப்படுகிறது) (Valangaiman) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் தாலுக்காவில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் பிறந்த ஊரான உத்தமதானபுரம் இந்த வட்டத்தில் உள்ளது. வலங்கைமான் தாலுகாவிற்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
வலங்கிமான் திருவாரூர் மாவட்டத்திலிருந்து வடமேற்கே 31 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது. இது தஞ்சாவூருக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும், நீடாமங்கலத்திலிருந்து வடக்கே 14 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரிலிருந்து மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
வலங்கைமான் வட்டம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 71 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் ஐம்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வலங்கைமான் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியதின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வலங்கைமானில் இயங்குகிறது. வலங்கைமான் ஊராட்சி மன்ற தலைவருக்காக ஜெபிப்போம். ஊராட்சி மன்றங்களுக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 5.46 சகிமீ பரப்பும், 102 தெருக்கள் உள்ளன. வலங்கைமான் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. புங்கஞ்சேரி மற்றும் வளையமாபுரம் மற்றும் லயம் ஆகியவை வலங்கைமான் நகர பஞ்சாயத்தின் ஒரு பகுதியாகும். இந்த வட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் Bro. M.Selvarasu அவர்களுக்காகவும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. R.Kamaraj அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் கடமையை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.
வலங்கைமான் நகரத்தில் மொத்தம் 100,645 மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் 50,209 ஆண்களும், 50,436 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 88.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 25,114 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.2%, இசுலாமியர்கள் 6.39%, கிறித்தவர்கள் 2.31% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர். கிறிஸ்தவர்கள் குறைவாக உள்ள இந்த பேரூராட்சியில் கர்த்தருடைய ஆளுகை இறங்கவும், பெரிய எழுப்புதல் உண்டாகவும், அநேக மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.
வலங்கைமானின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 63%. இந்த நகரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது வட்டாரத்திலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வலங்கைமான் பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காகவும், கல்லூரிகளுக்காகவும் அங்கு பயிலும் மாணவர்களுடைய பாதுகாப்பிற்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
வலங்கைமான் பேரூராட்சியில் 5768 விவசாய குடும்பங்கள் இருக்கின்றன. இந்த விவசாய குடும்பங்களுக்காகவும், கர்த்தர் அவர்களுடைய தொழிலை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம். இங்கு விவசாய நிலத்தில் 22,054 பேர் கூலி வேலை செய்கிறார்கள். அவர்களின் குடும்பங்களின் தேவைகளை கர்த்தர் சந்திக்கும்படியாக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் மொத்தம் தொழிலாளர்கள் 40,916 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 26,712 ஆண்கள் மற்றும் 14,204 பெண்கள். அவர்கள் கையிட்டு செய்கிற எல்லா வேலைகளிலும் கர்த்தர் அவர்களோடுகூட இருந்து அவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.