No products in the cart.
தினம் ஓர் ஊர் – பெரியகுளம் (Periyakulam) – 06/10/23

தினம் ஓர் ஊர் – பெரியகுளம் (Periyakulam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 217,358
கல்வியறிவு – 77.39%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – பெரியகுளம்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.S.Saravanakumar (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. S.Ganesh
நகராட்சி தலைவர் – Sis. S.Sumitha
நகராட்சி துணை தலைவர் – Bro. S.Raja Mohamed
Revenue Divisional Officer – Sis. K.Sindhu (Periyakualam)
Town Planning Inspector – Bro. R.Veeranan
Principal District Judge – Sis. K. Arivoli
Additional District & Sessions Judge – Bro. P.Ganesan (Periyakulam)
Subordinate Judge – Bro. K.Mariappan (Periyakulam)
District Munsif – Bro. A.Kannan (Periyakulam)
Judicial Magistrate – Bro. K.Kamalanathan (Periyakulam)
ஜெபிப்போம்
பெரியகுளம் (Periyakulam) என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மண்டலத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த ஊரின் பெயர் “பெரிய ஏரி” என்பதற்குச் சமமான இரண்டு தமிழ் வார்த்தைகளிலிருந்து உருவானது. தமிழில் “பெரிய” மற்றும் தமிழில்: குளம் என்பது “ஏரி” ஆகும். தமிழ் இலக்கியத்தில் இவ்வூரின் பெயர் குளந்தை மாநகரம் (தமிழில் குழந்தை மாநகரம்) என்று அழைக்கப்படுகிறது. பெரியகுளம் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
பாண்டியர்களின் ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பாச்சி கவுண்டர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கன்னடம், மற்றும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர். மதுரைத் தமிழ் என்பது நிலையான பேச்சுவழக்கு ஆகும்.
மாவட்ட ஆட்சியர் Sis. R.V.Shajeevana அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. Dongare Pravin Umesh அவர்களுக்காகவும், District Revenue Officer Sis. Jeyabharathi அவர்களுக்காகவும், District Forest Officer Bro. S.Kowtham அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை வழிநடத்திட ஜெபிப்போம்.
பெரியகுளம் நகராட்சியின் மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர் Bro. K.S.Saravanakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
பெரியகுளம் நகராட்சி ஆணையர் Bro. S.Ganesh அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Sumitha அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S.Raja Mohamed அவர்களுக்காகவும், Revenue Divisional Officer Sis. K.Sindhu அவர்களுக்காகவும், Town Planning Inspector Bro. R.Veeranan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற எல்லா பணிகளிலும் தேவகரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இவ்வட்டத்தில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் என பெரியகுளம் மற்றும் தேவதானப்பட்டி என 2 உள்வட்டங்களும், 22 வருவாய் கிராமங்களும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராமத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 217,358 மக்கள்தொகையை கொண்டுள்ளது. இவர்களில் 109,907 ஆண்களும், 107,451 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 47.3% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதில் இந்துக்கள் 89.64%, இசுலாமியர்கள் 7.35%, கிறித்தவர்கள் 2.84% & பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.18% ஆகவுள்ளனர். இவ்வட்டத்தில் 57,001 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
பெரியகுளம் ‘மாம்பழ நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் அதன் இனிப்பு மாம்பழங்களுக்கு பெயர் பெற்றது. பெரியகுளம் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் இனிப்பான தண்ணீருக்கும் பெயர் பெற்றது. ஆண்டு முழுவதும் நல்ல வானிலை நிலவுகிறது. நகரம் “தொல்பொருள் சின்னங்கள், கல்வெட்டுகள் மற்றும் பழங்கால கோவில்கள்” போன்ற வரலாற்று நினைவுச்சின்னங்களுடன் வளமான வளங்களைக் கொண்டுள்ளது. இது மக்களின் கவனத்தை ஈர்க்கும் “புனித இடமாகவும்” கருதப்படுகிறது.
பெரியகுளத்தைச் சுற்றிலும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவைகள், சோத்துப்பாறை அணை, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, தீர்த்த தொட்டி, வைகை அணை, மஞ்சளார் அணை, கொடைக்கானல் (கும்பக்கரை வழியாக 49 கிமீ, தேவதானப்பட்டி வழியாக தேக்கடி, சுருளிதீர்த்தம், மூணாறு மற்றும் பல சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இதற்காகவும், இங்குவரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.
பெரியகுளத்தில் உள்ள 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொகுதிக் கல்லூரிகளில் ஒன்றான தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (HC & RI), பெரியகுளத்தில் அமைந்துள்ளது. பெரியகுளத்தில் அரசு செவிலியர் கல்லூரி உள்ளது. இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
பெரியகுளம் நகராட்சிக்காக ஜெபிப்போம். பெரியகுளத்தில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். கர்த்தர் பெரியகுளம் பகுதியில் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். பெரியகுளம் நகரத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். பெரியகுளம் நகரத்தில் கர்த்தரால் அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும், அநேக தேவ ஊழியர்களையும் கர்த்தர் எழுப்பி தரும்படி ஜெபிப்போம்