No products in the cart.
தினம் ஓர் ஊர் – பூலாம்பட்டி (Poolampatti) – 04/09/24
தினம் ஓர் ஊர் – பூலாம்பட்டி (Poolampatti)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
வட்டம் – எடப்பாடி
மக்கள் தொகை – 9,477
கல்வியறிவு – 63.04%
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Edappadi Municipality Commissioner – Bro. S.Musthaba
Edappadi Municipality Chairman – Bro. D.S.M. Basha
Edappadi Municipality Vice – Chairman – Sis. N. Radha
மக்களவைத் தொகுதி – சேலம்
சட்டமன்றத் தொகுதி – எடப்பாடி
மக்களவை உறுப்பினர் – Bro. Tm Selvaganapathi (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Edappadi K. Palaniswami (MLA)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
District Munsif-cum- Judicial Magistrate – Bro. K.Vignesmadhu (Edappadi)
ஜெபிப்போம்
பூலாம்பட்டி (Poolampatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் எடப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி, சேலத்திலிருந்து 49 கிமீ தொலைவில் உள்ளது. குட்டி கேரளா என்று அழைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும். சேலம் மாவட்டத்தில் 49 கிலோ மீட்டர் துரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. எடப்பாடி – மேட்டூர் மெயின் ரோட்டில் பூலாம்பட்டி பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சி 8 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இதன் கிழக்கே எடப்பாடி 12 கிமீ; மேற்கே நெருஞ்சிப்பேட்டை 6 கிமீ; வடக்கே மேட்டூர் 17 கிமீ; தெற்கே சங்ககிரி 27 கிமீ தொலைவில் உள்ளது.
பூலாம்பட்டி பேரூராட்சி எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். எடப்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Edappadi K. Palaniswami அவர்களுக்காகவும், சேலம் மக்களவை உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ கரம் வழிநடத்தும்படி ஜெபிப்போம்.
பூலாம்பட்டி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியின் நகராட்சியின் ஆணையர் Bro. S.Musthaba அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. D.S.M. Basha அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. N. Radha அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணியினை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்ய கர்த்தர் இவர்களை பெலப்படுத்தும்படி ஜெபிப்போம்.
பூலாம்பட்டி பேரூராட்சியில் 2,698 குடும்பங்களும், 9,477 மக்கள்தொகையும், கொண்டது. இதில் 4,769 ஆண்கள் மற்றும் 4,708 பெண்கள் உள்ளனர். பூலாம்பட்டியில் ஆண்களின் கல்வியறிவு 77.36% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 57.04% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 97.81%, இஸ்லாமியர்கள் 0.11%, கிறிஸ்தவர்கள் 1.89% மற்றும் பௌத்த 0.01% உள்ளனர். இப்பேரூராட்சியில் 38 தெருக்கள் உள்ளது.
பூலாம்பட்டி பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது. காவிரியின் கரையில் அமைந்திருப்பதால் இந்த கிராமம் பெரிதும் விவசாயத்தையே நம்பியுள்ளது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் போன்ற நன்செய் பயிர்கள் அதிகம் விளைகின்றன. பூலாம்பட்டி அருகில் உள்ள தடுப்பணை மூலம் ஆற்றில் விவசாயத்திற்குத் தண்ணீர் தேக்கப்படுகிறது.
பூலாம்பட்டியானது மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியை ஒட்டி உள்ளது. இங்கிருந்து காவிரி ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல படகு துறை உள்ளது. இந்த படகு துறையில் இருந்து ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டைக்கு விசைப்படகு போக்குவரத்து உள்ளது.
பூலாம்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். பூலாம்பட்டி பகுதியில் சத்தியத்தை அறியாத மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். பூலாம்பட்டி பகுதியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.