Daily Updates

தினம் ஓர் ஊர்-திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli) – 12/01/24

தினம் ஓர் ஊர்-திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli)

மாநிலம்-தமிழ்நாடு

மாவட்டம்-தஞ்சாவூர்

மக்கள் தொகை-12,972

கல்வியறிவு-76%

மக்களவைத் தொகுதி-தஞ்சாவூர்

சட்டமன்றத் தொகுதி-திருவையாறு

District Collector-Bro. Deepak Jacob, (I.A.S)

Additional Collector (Development)-Bro. H.S.Srikanth (I.A.S)

Deputy Inspector General of Police-Bro. T.Jayachandran (I.P.S)

Superintendent of Police-Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer-Bro. T.Thiyagarajan

மக்களவை உறுப்பினர்-Bro. S.S.Palanimanickam (MP)

சட்டமன்ற உறுப்பினர்-Bro. Durai Chandrasekaran (MLA)

Mayor, Thanjavur City Municipal Corporation-Bro. Sun. Ramanathan

Commissioner & Special Officer,

Thanjavur City Municipal Corporation-Sis. R. Maheshwari

Vice Mayor-Sis. Anjugam Boopathy

Principal District Judge -Sis. Jacintha Martin (Thanjavur)

Presiding Officer and

Additional District Judge-Bro. G.Sundarajan (Thanjavur)

District Munsif-cum-Judicial Magistrate-Bro. N.Azhagesan

ஜெபிப்போம்

திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியிலிருந்து, தஞ்சாவூர் 30 கி.மீ; திருச்சி 32 கி.மீ; திருவையாறு 17 கி.மீ; பூதலூர் 8 கி.மீ தொலைவிலும் உள்ளது. இப்பேரூராட்சி 6.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள வார்டு கவுன்சிலர்களுக்காகவும், அவர்களுடைய பொறுப்புகளுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் Bro. Durai Chandrasekaran அவர்களுக்காகவும், தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் Bro. S.S.Palanimanickam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவ சித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.

திருக்காட்டுப்பள்ளி (பழமையான பெயர்: மேலைத்திருக்காட்டுப்பள்ளி) என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறுக்கு அருகில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும் . இந்த நகரத்தின் பொருளாதாரம் முக்கியமாக சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

திருக்காட்டுப்பள்ளி மக்கள் தொகை 12,567. இதில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% உள்ளனர்.  திருக்காட்டுப்பள்ளியின் சராசரி கல்வியறிவு 76% ஆகும். இவர்களில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆக உள்ளது. இந்த நகரத்தில் மொத்தம் 3,304 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். இங்குள்ள மக்களுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இருக்கும்படி ஜெபிப்போம்.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தைகள் விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். திருக்காட்டுப்பள்ளி நகரத்தில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.