No products in the cart.

தினம் ஓர் ஊர் – தா. வாடிப்பட்டி அல்லது வாடிப்பட்டி(T. Vadipatti or Vadipatti)
தினம் ஓர் ஊர் – தா. வாடிப்பட்டி அல்லது வாடிப்பட்டி(T. Vadipatti or Vadipatti)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – மதுரை
மக்கள் தொகை – 234,533
கல்வியறிவு – 80.7%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – சோழவந்தான்
District Collector – Sis. M. S. Sangeetha (IAS)
Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)
Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)
District Revenue Officer – Bro. R. Sakthivel
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. Venkatesan (MLA)
Mayor – Sis. Indirani Pon Vasanth
Deputy Mayor – Bro.T. Nagarajan
Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar
Deputy Commissioner – Bro. M. Dhayanithi
Deputy Commissioner – Bro. K. Saravanan
Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)
Judicial Magistrate – Sis. S. Vengatalakshmi
ஜெபிப்போம்
தா. வாடிப்பட்டி அல்லது வாடிப்பட்டி (T. Vadipatti or Vadipatti) தமிழ்நாட்டில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலைப் பேரூராட்சி ஆகும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் எருதுகட்டு விழா ஆகிய திருவிழாக்கள் இந்த நகரத்தில் புகழ்பெற்று விளங்கியுள்ளது. வாடிப்பட்டி பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
“வாடிப்பட்டி” என்ற பெயர் வாயில் அல்லது வாசல் என்ற மூல வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது ‘கதவு’ அல்லது ‘நுழைவாயில்’. இது மதுரையின் வரலாற்று எல்லைகளில் ஒன்றாகவும், நுழைவாயிலாகவும் இருந்தது, அதே போல் பாண்டியர்களின் முகாம் இடமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
வாடிப்பட்டி சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A. Venkatesan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் ஏழு உள்வட்டங்களும், 77 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. வாடிப்பட்டியில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
வாடிப்பட்டி தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 234,533. இதில் 117,723 ஆண்கள் மற்றும் 116,810 பெண்கள் உள்ளனர். இந்த தாலுகாவில் மொத்தம் 60,844 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 30.8% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர், 69.2% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.34% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிறிஸ்தவர்கள் 1.45%, இஸ்லாமியர்கள் 0.58% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
வாடிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 80.49% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 87.03%, பெண்களின் கல்வியறிவு 74.08% ஆகும். நகர்ப்புறங்களில் சராசரி கல்வியறிவு விகிதம் 80.7% ஆகவும், கிராமப்புறங்களில் 76.1% ஆகவும் உள்ளது. இந்த தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்காகவும், படிக்கும் மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
வாடிப்பட்டி ஒரு தாலுகா தலைமையகம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. இங்கு ஹாக்கி விளையாட்டில் முத்து பதிக்கும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளி, கல்வியில் சிறந்து விளங்கும் தாய் நிறுவன பள்ளிகள் மற்றும் தாய் பெண்கள் கல்லூரி, ஃபுஸ்கோஸ் பள்ளி, வெங்கடாஜலபதி பள்ளி மற்றும் சார்லஸ் பள்ளி போன்ற பள்ளிகள் இந்நகரத்தின் கல்வி மற்றும் விளையாட்டின் ஊற்றாக உள்ளன. வாடிப்பட்டி ஏராளமான ஹாக்கி வீரர்களை உருவாக்கியுள்ளது; அவர்களில் சிலர் தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
TAFE, மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, திண்டுக்கல் சிப்காட் (வாடிப்பட்டிக்க்கு அருகில்), அலங்காநல்லூர் கரும்புத் தொழிற்சாலை, குளிர்பதனக் கிடங்கு, ரப்பர் உதிரி பாகங்கள், தின்பண்டங்கள் போன்ற பல்வேறு பெரிய நிறுவனங்களைக் கொண்டும் சிறு தொழில்களைக் கொண்டும் இந்நகரம் இயங்குகிறது. இதற்காக ஜெபிப்போம்.
முல்லை பெரியாறு வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு முக்கிய ஆதராமாக அமைந்துள்ளது. முக்கியமாக நெல், வாழை மற்றும் தென்னை போன்றவை பயிரிடப்படுகின்றது. வாடிப்பட்டியிலுள்ள புகழ்மிக்கதான ஆரோக்கிய அன்னை திருத்தலம் இரண்டாம் வேளாங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது.
வாடிப்பட்டி தாலுகாவில் மொத்த மக்கள் தொகையில் 118,091 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களில் 8,577 பேர் விவசாயிகள் மற்றும் 51,370 பேர் விவசாயத் தொழிலாளர்கள். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழிலுக்காகவும் ஜெபிப்போம்.