
தினம் ஓர் ஊர் – சிவகிரி (Sivagiri) – 26/02/25
தினம் ஓர் ஊர் – சிவகிரி (Sivagiri)
மாவட்டம் – தென்காசி
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 194,156
கல்வியறிவு – 73.58%
மாவட்ட ஆட்சியர் – Bro. Dr. G.S.Sameeran, I.A.S
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – Bro. Aravind, T.P.S.,
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – வாசுதேவநல்லூர்
Principal District Judge – Bro. B. Rajavel (Tenkasi)
Additional District Judge – Bro. S. Manojkumar (Tenkasi)
Chief Judicial Magistrate – Bro. C.Kathiravan (Tenkasi)
Principal District Munsif – Sis. M.Jenifer Jose (Sivagiri)
Additional District Munsif
cum Judicial Magistrate – Sis. P. Jeyakaleeswari (Sivagiri)
ஜெபிப்போம்
சிவகிரி (Sivagiri), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு பசுமை நிறைந்த பகுதியாகும். சிவகிரி திருநெல்வேலியிலிருந்து 100 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவில் 32 கிமீ தொலைவிலும், இராஜபாளையம் 20 கிமீ தொலைவிலும், புளியங்குடி 18 கிமீ தொலைவிலும் உள்ளது. சிவகிரி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
சிவகிரி வட்டம் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் என வாசுதேவநல்லூர், சிவகிரி, கூடலூர் என 3 குறுவட்டங்களும், 21 வருவாய் கிராமங்களும் உள்ளன. இந்த நகரம் 47 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
சிவகிரி தாலுகாவில் மொத்தம் 194,156 மக்கள் வாழ்கிறார்கள்.அவர்களில் 95,537 பேரும், பெண்கள் 98,619 பேரும் உள்ளனர். சிவகிரி தாலுகாவில் மொத்தம் 54,421 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 37.3% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் இந்துக்கள் 85.35%பேரும், இசுலாமியர்கள் 8.74% பேரும், கிறித்தவர்கள் 5.77% பிறர் 0.14% பேரும் இருக்கிறார்கள். சிவகிரி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
வகிரி என்பது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரம் மற்றும் சுற்றுலாத் தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலையணை நீர்வீழ்ச்சி மற்றும் ராசிங்கபேரி கால்வாய் ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இந்த பேரூராட்சியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்காக ஜெபிப்போம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஜெபிப்போம்.
சிவகிரி நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளில் கர்த்தர் ஆசீர்வாதத்தை கொடுக்கும்படி ஜெபிப்போம். தொழிலுக்கு உண்டான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். தொழில்களில் வளர்ச்சி உண்டாக ஜெபிப்போம்.
சிவகிரி நகரத்திற்காக ஜெபிப்போம். சிவகிரி நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். சிவகிரி நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், தென்காசி மக்களவை உறுப்பினருக்காகவும், ஜெபிப்போம். சிவகிரி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.