No products in the cart.
தினம் ஓர் ஊர்-குளித்தலை (Kulithalai) – 22/06/24
தினம் ஓர் ஊர்-குளித்தலை (Kulithalai)
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்-கரூர்
பரப்பளவு-11.16 ச.கி.மீ (4.31 சதுர மைல்)
மக்கள் தொகை-27,910
கல்வியறிவு-81.22%
மக்களவைத் தொகுதி-பெரம்பலூர்
சட்டமன்றத் தொகுதி-குளித்தலை
District Collector-Bro. M. Thangavel, I.A.S
Superintendent of Police-Bro. Prabhakar
District Revenue Officer-Bro. M. Kannan
Project Director-Sis. Sreelekha Thamilchelvan
Municipality Commissioner-Bro. N.Nanda Kumar (Kulithalai)
Chairman-Bro. V.P.Sekar (Kulithalai)
Vice-Chairman-Bro. K.M.Senthilkumar (Kulithalai)
மக்களவை உறுப்பினர்-Bro. Arun Nehru (MP)
சட்டமன்ற உறுப்பினர்-Bro. R.Manickam (MLA)
District Judge -Bro. R. Shanmuga Sundaram
Chief Judicial Magistrate (Karur)-Bro. C.Sornakumar
Principal District Munsif Judge (Karur)-Sis. T.P.Sridevi
Principal District Munsif- Sis. R.Tamilarasi
ஜெபிப்போம்
குளித்தலை (Kulithalai) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மற்றும் திருச்சிராப்பள்ளி நகரத்தின் துணை நகரமாகும். குளித்தலையின் பதிவுசெய்யப்பட்ட வரலாறு சேரர்களிடமிருந்து அறியப்படுகிறது, அதைத் தொடர்ந்து 9 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர் காலம் மற்றும் வெவ்வேறு காலங்களில், இடைக்கால சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது.
கடம்ப வனேஸ்வரர் கோவிலின் பிரதான தெய்வத்திலிருந்து இந்த நகரம் அதன் பெயரைப் பெற்றது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயன்மார்கள் (சைவ மகான்கள்) திருநாவுக்கரசர், தேவாரத்தில் தனது படைப்புகளில் இத்தலத்தை கடம்பந்துறை என்றும் குழிதந்தலை என்றும் போற்றியுள்ளார். குழித்தண்டலை என்ற சொல் தற்காலத்தில் குளித்தலை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நகராட்சி காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி “குளிர் தண்டலை” என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் “குளித்தலை” என்று மாறியது.
குளித்தலை நகரம் 17.5.1994 அன்று நகராட்சி தரம் III ஆக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது அது 22.5.98 முதல் இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன, ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் உள்ளனர். நகராட்சியின் செயல்பாடுகள் ஆறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நகராட்சி ஆணையர் சகோ. நந்தகுமார் அவர்களுக்காகவும், தலைவர் சகோ. வி.பி.சேகர் அவர்களுக்காகவும், துணைத் தலைவர் சகோ. கே.எம்.செந்தில்குமார் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் சகோ. M. Thangavel அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. Prabhakar அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. M. Kannan அவர்களுக்காகவும், Project Director Sis. Sreelekha Thamilchelvan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
குளித்தலை நகராட்சி கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. குளித்தலை நகராட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சகோ. ஆர்.மாணிக்கம் அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் அருண் நேரு அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை வல்லமையாய் எடுத்து பயன்படுத்தும்படியாகவும், மக்களுடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றும்படி ஜெபிப்போம்.
இந்நகரத்தின் மக்கள் தொகை 27910 ஆகும். அதில் 13,843 ஆண்களும், 14,067 பெண்களும் உள்ளனர். இங்கு 7,374 குடும்பங்கள் வாழ்ந்துவருகிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.47%, இசுலாமியர்கள் 7.35%, கிறித்தவர்கள் 3.12% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர். இந்த நகரத்தின் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.
குளித்தலை நகராட்சியில் காவிரி ஆறு இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை பயிரிடப்படுகிறது. குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வாழைக்கு அடுத்தபடியாக கரும்புக்குத் தான் இங்கே முக்கியத்துவம். விவசாய தொழிலை கர்த்தர் ஆசீர்வதித்து, விவசாய குடும்பங்களை பாதுகாக்கும்படி ஜெபிப்போம். விவசாயிகளின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
இந்நகரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில், ரத்தினக் கற்கள் வெட்டுதல் மற்றும் அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் மற்றும் தென்னை நார் உற்பத்தி அலகுகள் போன்ற வீட்டுத் தொழில்கள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம். இந்த நகர மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
குளித்தலை நகரில் மருத்துவ சேவைகள், அவசர உதவி, அரசு மருத்துவமனை, பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்காக, செவிலியர்களுக்காக, மருத்துவமனை ஊழியர்களுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம். குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. கல்வி நிறுவனங்களில் பணி செய்யும் அதிகாரிகளுக்காக மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ஜெபிப்போம்.
குளித்தலை நகராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தின் முக்கிய தொழிலான விவசாய தொழிலுக்காகவும், விவசாயிகளுக்காகவும் ஜெபிப்போம். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். குளித்தலை பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.