Daily Updates

தினம் ஓர் ஊர் – கீழப்பாவூர்(Keezhapavur) – 03/08/23

தினம் ஓர் ஊர் – கீழப்பாவூர்

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தென்காசி

மக்கள் தொகை – 44,462

கல்வியறிவு – 67%

மக்களவைத் தொகுதி – தென்காசி

சட்டமன்றத் தொகுதி – ஆலங்குளம்

மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)

District Revenue Inspector – Bro. M.Nagaranjan

Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu

மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Manoj Pandian (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)

நகராட்சி தலைவர் –  Bro. R.Sadhir

நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah

Municipal Engineer – Bro. R.Jayaseelan

Principal District Munsif – Bro. K. Baskar

Additional District Judge – Sis. G.Anuradha

ஜெபிப்போம்

கீழப்பாவூர் (Keezhapavur), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். கீழப்பாவூருக்கு வரலாற்றில் பாகூர் ஆன சத்திரிய சிகாமணி நல்லூர் என்றும் பெயருண்டு. இதன் பெரிய குளத்திற்கு நீர் வரும் சிற்றாற்று சித்திர வாய்க்காலுக்கு வீரராஜேந்திரன் வாய்க்கால் என்றும் ஒரு பெயருண்டு. இன்று வழங்கி வரும் கீழப்பாவூர் வரலாற்றில் மிகப் பழமையான ஒன்று ராஜராஜ சோழன் வழி வந்த சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருகபாலீஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்) இங்கு உள்ளது. இங்குள்ள நரசிம்மர் கோயில் புகழ்பெற்றதாகும். கீழப்பாவூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்த கீழப்பாவூர் பேரூராட்சியின் கிழக்கில் 10 கிமீ தொலைவில் ஆலங்குளமும், மேற்கில் 15 கிமீ தொலைவில் தென்காசியும், வடக்கில் 5 கிமீ தொலைவில் சுரண்டையும், தெற்கில் 15 கிமீ தொலைவில் கடையம் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி 14.18 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 148 தெருக்களும், 11934 வீடுகளும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை பொறுப்போடு செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Manoj Pandian அவர்களுக்காகவும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காக ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகை இவர்களை வழிநடத்திட ஜெபிப்போம்.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஆலங்குளம் வட்டத்தில் அமைந்த கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. கீழப்பாவூர் ஊராட்சி மன்ற தலைவருக்காக, ஊராட்சி மன்ற துணை தலைவருக்காக, மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி 44,462 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% உள்ளனர். கீழப்பாவூரில் சராசரி கல்வியறிவு 67% உள்ளது. இதில் ஆண்கள் 76% பேரும், பெண்கள் 57% பேரும் இருக்கிறார்கள். கீழப்பாவூரில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக, இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். வேலைக்காக காத்திருக்கும் வாலிப பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்ல வேலையை கொடுத்து அவர்களையும், அவர்களுடைய குடும்பங்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

கீழப்பாவூர் பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலையை கர்த்தர் ஆசீர்வதித்து வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம். கீழப்பாவூர் பேரூராட்சியில் உள்ள மக்கள் கர்த்தருக்காக அதிகமாய் எழும்பி பிரகாசிக்க, அவர்களை கொண்டு கர்த்தர் பெரிய அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்யவும் ஜெபிப்போம். கீழப்பாவூர் பேரூராட்சியை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.