No products in the cart.

தினம் ஓர் ஊர் – கீரிப்பட்டி (Keeripatti) – 07/09/24
தினம் ஓர் ஊர் – கீரிப்பட்டி (Keeripatti)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
வட்டம் – ஆத்தூர்
பரப்பளவு – 26.87 சதுர கிலோமீட்டர்கள் (10.37 sq mi)
மக்கள் தொகை – 10,208
கல்வியறிவு – 75.99%
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Attur Municipal Commissioner – Sis. D.V. Subhashini
Attur Municipal Chairman – Sis. M. Nirmalapapitha
Attur Municipal Vice -Chairman – Sis. G. Kavitha
Revenue Inspector – Bro. Nagaraj
மக்களவைத் தொகுதி – கள்ளக்குறிச்சி
சட்டமன்றத் தொகுதி – ஆத்தூர்
மக்களவை உறுப்பினர் – Bro. Malaiyarasan (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. P. Jayasankaran (MLA)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
Subordinate Judge – Bro. K. Ananthan (Attur)
ஜெபிப்போம்
கீரிப்பட்டி (Keeripatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். . இது ஜல்லிக்கட்டுக்கு பிரபலமானது, அங்குள்ள கலாச்சாரம். கீரிப்பட்டி அனைத்து பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.
கீரிப்பட்டி பேரூராட்சி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் Bro. A. P. Jayasankaran அவர்களுக்காகவும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Malaiyarasan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களோடுகூட இருந்து செய்கிற காரியங்களையெல்லாம் நிறைவேற்றி தரும்படி ஜெபிப்போம். தேவ ஞானத்தோடு செய்ய கர்த்தர் இவர்களுக்கு கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம்.
கீரிப்பட்டி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஆத்தூர் நகராட்சி ஆணையர் Sis. D.V. Subhashini அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. M. Nirmalapapitha அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. G. Kavitha அவர்களுக்காகவும் ஜெபிப்போம். வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 10,208 மக்கள்தொகை உள்ளது, இதில் 5,174 ஆண்கள் மற்றும் 5,034 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 2,584 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். கீரிப்பட்டியில், ஆண்களின் கல்வியறிவு 83.95% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 67.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்து 98.90%, முஸ்லிம் 0.41%, கிறிஸ்தவர் 0.56% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.
கீரிப்பட்டி முதல்நிலை பேரூராட்சி சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். மாவட்ட தலைநகரத்திலிருந்து 54 கிலோ மீட்டர் தூரத்திலும், ஆத்தூர்-தம்மம்பட்டி மெயின்ரோட்டிலும் உள்ளது. இப்பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது. மொத்த 5291 உழைக்கும் மக்களில், 88.98 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,184 ஆண்கள் மற்றும் 2,107 பெண்கள்.
கீரிப்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். கீரிப்பட்டி பகுதியில் சத்தியத்தை அறியாத மக்களுக்கு ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். கீரிப்பட்டி பகுதியில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காகவும், அவர்கள் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.