No products in the cart.

தினம் ஓர் ஊர் – கந்தர்வக்கோட்டை (Gandarvakottai) – 27/04/25
தினம் ஓர் ஊர் – கந்தர்வக்கோட்டை (Gandarvakottai)
மாவட்டம் – புதுக்கோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 86,720
கல்வியறிவு – 62.52 %
மக்களவைத் தொகுதி – திருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதி – கந்தர்வகோட்டை (தனி)
மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta
மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R
Chief Judicial Magistrate – Bro. K.S.Paulpandian (Pudukkottai)
Principal Subordinate Judge – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)*
District Munsif cum Judicial Magistrate – Sis. B.Risana Parveen (Gandarvakkottai)
ஜெபிப்போம்
கந்தர்வகோட்டை (Gandarvakottai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா ஆகும். இந்த நகரம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைக்கு நடுவில் உள்ளது. இது தஞ்சாவூரில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும்; புதுக்கோட்டைக்கு வடகிழக்கில் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
கந்தர்வகோட்டை வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக கந்தர்வகோட்டை சிற்றூர் உள்ளது. இந்த வட்டத்தில் புதுநகர், கல்லாக்கோட்டை, கந்தர்வகோட்டை என 3 உள்வட்டங்களும், 37 வருவாய் கிராமங்களும் உள்ளன.
கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி (தனி) – க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி உட்பட்டது. கந்தர்வக்கோட்டை வட்டம் மற்றும் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது கந்தர்வக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்த தாலுகாவில் மொத்த மக்கள் தொகை 86,720 ஆகும். இதில் 43,513 ஆண்கள் மற்றும் 43,207 பெண்கள் உள்ளனர். இந்த தாலுகாவில் கல்வியறிவு பெற்றவர்கள் 30,717 பேரில் 54,218 பேர் ஆண்கள் மற்றும் 23,501 பேர் பெண்கள் ஆவர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய இரட்சிப்பிற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள குடும்பங்களை கர்த்தருடைய வல்லமையான கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
கந்தர்வகோட்டை வட்டத்தில் மொத்தத் தொழிலாளர்கள் 43,832 பேர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 25,830 ஆண்கள் மற்றும் 18,002 பெண்கள். மொத்தம் 10,788 விவசாயிகள் விவசாயத்தை நம்பி உள்ளனர், அவர்களில் 7,136 பேர் ஆண்கள் மற்றும் 3,652 பேர் பெண்களால் பயிரிடப்படுகிறார்கள். கந்தர்வக்கோட்டையில் 25,145 பேர் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்கிறார்கள், ஆண்கள் 13,488 பேர், பெண்கள் 11,657 பேர் உள்ளனர்.
கந்தர்வகோட்டை பல உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. கோவில்கள், சர்ச் மற்றும் மசூதி ஆகியவை இங்கு உள்ளன. Gkt இல் பல பொறியாளர்கள், மருத்துவர்கள், வணிகர்கள் மற்றும் ஒரு சில கட்டிடக் கலைஞர்கள் உள்ளனர். அருகிலுள்ள துறைமுகம் தூத்துக்குடி ஆகும். இது Gkt இலிருந்து 380 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் உள்ளன.
கந்தர்வக்கோட்டை தாலுகாவிற்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள உள்வட்டங்களுக்காகவும், வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்கள் செய்கின்ற தொழிலுக்காக ஜெபிப்போம்.