No products in the cart.

தினம் ஓர் ஊர் – கண்டமனூர் (Gandamanur) – 10/10/23
தினம் ஓர் ஊர் – கண்டமனூர் (Gandamanur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 7801
கல்வியறிவு – 62.53%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – ஆண்டிப்பட்டி
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)*
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A.Maharajan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan
நகராட்சி தலைவர் – Sis. B.Renupriya
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam
Principal District Judge – Sis. K. Arivoli
Judicial Magistrate – Bro. T.Pitchai Rajan (Andipatti)
District Munsif – Bro. A.Kannan (Andipatti)
ஜெபிப்போம்
கண்டமனூர் ஊராட்சி (Gandamanur Gram Panchayat) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள க. மயிலாடும்பாறை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். கண்டமனூர் ஊராட்சி மன்றத் தொகுதிகளுக்காகவும், ஊராட்சி மன்றத் தலைவருக்காகவும் ஜெபிப்போம்.
தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்ற போது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்தார். இப்பாளையங்களில் கண்டமநாயக்கனூர் எனும் பாளையமும் ஒன்று. இப்பகுதியின் பாளையக்காரராக இருந்த கண்டமநாயக்கர் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. கண்டமநாயக்கனூர் பிற்காலத்தில் கண்டமனூர் என்று மருவியது. கண்டமனூர் ஊராட்சிக்காக ஜெபிப்போம்.
ராஜதானி (8 கிமீ), ஆத்தங்கரைப்பட்டி (8 கிமீ), தெப்பம்பட்டி (8 கிமீ), கடமலைக்குண்டு (8 கிமீ), துரைச்சாமிபுரம் (9 கிமீ) ஆகியவை கண்டமனூருக்கு அருகிலுள்ள கிராமங்கள். கண்டமனூரை சுற்றி வடக்கு நோக்கி ஆண்டிப்பட்டி தொகுதி, வடக்கே தேனி தொகுதி, மேற்கு நோக்கி சின்னமனூர் தொகுதி, கிழக்கு நோக்கி சேடபட்டி தொகுதி உள்ளது. மேலும் தேனி அல்லிநகரம், உத்தமபாளையம், உசிலம்பட்டி, பெரியகுளம் ஆகியவை கண்டமனூருக்கு அருகில் உள்ள நகரங்கள் ஆகும். கண்டமனூரை சுற்றியுள்ள கிராமங்களுக்காகவும், நகரங்களுக்காகவும் ஜெபிப்போம்.
பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்து வந்த பகுதிகள் பாளையங்கள் என அழைக்கப்பட்டு வந்தன. இந்தியாவிற்குள் ஆங்கிலேயர்களின் படையெடுப்புக்கு பின்பு பாளையங்கள் அனைத்தும் ஜமீன் முறையாக மாற்றப்பட்டன. இதனால் 72 பாளையங்கள் ஜமீன் ஆக மாற்றப்பட்டன. இதில் அதிக வரி செலுத்தும் ஜமீனாகவும், மிகப் பெரிய ஜமீன் நிலப்பரப்பைக் கொண்டது கண்டமனூர்.
இந்த ஊராட்சி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. A.Maharajan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை உண்மையாகவும், தேவ பயத்தோடு செய்யவும் ஜெபிப்போம்.
கண்டமனூர் ஊராட்சியில் மொத்த மக்கள் தொகை 7801 ஆகும். இவர்களில் பெண்கள் 3893 பேரும் ஆண்கள் 3908 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் காணப்படுகின்ற பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
இந்த ஊராட்சியில் 668 குடிநீர் இணைப்புகள், 2 சிறு மின்விசைக் குழாய்கள், 2 கைக்குழாய்கள், 3 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 3 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், 2 உள்ளாட்சிக் கட்டடங்கள், 12 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 4 ஊரணிகள் அல்லது குளங்கள், 10 ஊராட்சி ஒன்றியச் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஜெபிப்போம். மேலும் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
கண்டமனூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஆத்துகாடு, ஏழாயிரம்பண்ணை, புது ராமச்சந்திராபுரம் ஆகிய சிற்றூர்களுக்காக ஜெபிப்போம். இந்த சிற்றூர்களில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை எல்லாம் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். கண்டமனூர் பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.