No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஒரத்தநாடு (Orathanadu) – 21/12/23
தினம் ஓர் ஊர் – ஒரத்தநாடு (Orathanadu)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தஞ்சாவூர்
மக்கள் தொகை – 1,60,367
கல்வியறிவு – 75.16%
மக்களவைத் தொகுதி – தஞ்சாவூர்
சட்டமன்றத் தொகுதி – ஒரத்தநாடு
District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)
Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)
Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)
Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)
District Revenue Officer – Bro. T.Thiyagarajan
மக்களவை உறுப்பினர் – Bro. S.S.Palanimanickam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Vaithiyalingam (MLA)
Mayor, Thanjavur City Municipal Corporation – Bro. Sun. Ramanathan
Commissioner & Special Officer,
Thanjavur City Municipal Corporation – Sis. R. Maheshwari
Vice Mayor – Sis. Anjugam Boopathy
Principal District Judge – Sis. Jacintha Martin (Thanjavur)
Presiding Officer and
Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)
District Munsif Court – Bro.K.Chelliah (Orathanadu)
ஜெபிப்போம்
ஒரத்தநாடு (Orathanadu) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் இங்கு அமைந்துள்ள கால்நடைக் கல்லூரியும் ஒன்றாகும். ஒரத்தநாடு நகரத்திற்காக ஜெபிப்போம்.
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.
ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஊர். இது தஞ்சாவூரில் ஆண்ட சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது. ராணி முத்தம்மாள் பெயரில் அரண்மனை கட்டிடம் போன்ற ஒரு சத்திரம் ஒரத்தநாடு நகர பஞ்சாயத்தில் மன்னர் சரபோஜியால் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் இன்று முதல் சத்திரம் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரத்தநாடு நகரின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் அரசர் சரபோஜியின் கிழக்குப் பண்ணை எனப் பெயரிடப்பட்ட பண்ணைகள் இன்றுவரை உள்ளன. தற்போது தமிழ்நாடு அரசு கிழக்கு மற்றும் மேற்குப் பண்ணைகளில் கால்நடைப் பண்ணை (பால் பண்ணை) அமைத்து பராமரித்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் தஞ்சாவூர் 23 கிமீ, கிழக்கில் மன்னார்குடி 23 கிமீ, மேற்கில் கறம்பக்குடி 26 கிமீ, தெற்கில் பட்டுக்கோட்டை 24 கிமீ,தென்கிழக்கில் மதுக்கூர் 25 கிமீ, வடமேற்கில் அம்மாபேட்டை 25 கிமீ, வடகிழக்கில் வல்லம் 23 கிமீ போன்ற ஊர்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது.
இப்பேரூராட்சி ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் Bro. S.S.Palanimanickam அவர்களுக்காகவும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் Bro. Vaithiyalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் கர்த்தருடைய ஆளுகை உண்டாயிருக்க ஜெபிப்போம்.
ஒரத்தநாடு தேர்வு தர டவுன் பஞ்சாயத்து 1982 ஆம் ஆண்டு ஊராட்சியாக உருவாக்கப்பட்டது, இது 16.09.1951 அன்று முதல் தர நகர பஞ்சாயத்து ஆக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 24.2.1982 முதல் தேர்வு தர நகர பஞ்சாயத்து ஆகும். ஒரத்தநாடு பேரூராட்சியானது 7.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்டுள்ளது. Thanjavur City Municipal Corporation Mayor Bro. Sun. Ramanathan அவர்களுக்காகவும், Thanjavur City Municipal Corporation Commissioner & Special Officer Sis. R. Maheshwari அவர்களுக்காகவும், Vice Mayor Sis. Anjugam Boopathy அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த தாலுகாவில் மொத்த மக்கள்தொகை 1,60,367 ஆகும். இதில் 77,719 ஆண்கள் மற்றும் 82,648 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் 40,383 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தர் சமாதானத்தை கட்டளையிடும்படி ஜெபிப்போம்.
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாட்டு கல்லூரிகளிலோ, தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். ஒரத்தநாட்டில் இரண்டு பெரிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஒன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மற்றொன்று அரசு கல்வியியல் கல்லூரி ஆகும். பி.எட்., கல்லூரி முதல் முறையாக ஒரத்தநாட்டில் தமிழக அரசால் நிறுவப்பட்டது. இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்.
இந்த நகரம் பரந்த விவசாய நிலங்களால் சூழப்பட்டுள்ளது. உழவுத் தொழில் முதன்மையானது. பெரும்பாலான மக்கள் பண்ணைகள் மற்றும் விவசாயத்தை சார்ந்து வியாபாரம் செய்கின்றனர். விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.