Daily Updates

தினம் ஓர் ஊர் – ஏலாக்குறிச்சி  (Elakkurichi) – 27/04/24

தினம் ஓர் ஊர் – ஏலாக்குறிச்சி  (Elakkurichi)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – அரியலூர்

மக்கள் தொகை – 6,008

கல்வியறிவு – 66.91%

மக்களவைத் தொகுதி – சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி – அரியலூர்

மாவட்ட ஆட்சியர் – Sis. J. Anne Mary Swarna (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. S. Selvaraj (I.P.S)

மாவட்ட வருவாய் அலுவலர் – Sis. M.S.Kalaivani

திட்ட இயக்குனர் – Sis. S. Gangatharini

மக்களவை உறுப்பினர் – Bro. Thol. Thirumavalavan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. Chinnappa (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. Chithra Soniya

நகராட்சி தலைவர் – Sis. Shanthi K

நகராட்சி துணை தலைவர் – Bro. Kaliyamoorthy.T

வருவாய் ஆய்வாளர் – Bro. Rajendran.R

நகரமைப்பு அலுவலர் – Bro. Manikaselvan

Principal District and Session Judge  – Bro. M.Christopher (Ariyalur)

Additional District Judge – Bro. A.Karnan (Ariyalur)

ஜெபிப்போம்

ஏலாக்குறிச்சி (Elakurichi) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். அரியலூர் நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும் மற்றும் தஞ்சாவூர் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கி.பி. 1711-ஆம் ஆண்டில் ‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படும் பிரபல கத்தோலிக்க மிஷினரி கான்ஸ்டான்ஸோ பெஸ்கியால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் (அடைக்கல மாதா ஆலயம்) இங்கு உள்ளது. ஏலாக்குறிச்சி நகரத்திற்காக ஜெபிப்போம்.

ஏலாக்குறிச்சி முன்னதாக திருக்காவலூர் என்றழைக்கப்டுகிறது. அரியலூரிலிருந்து 25 கி.மீ., தூரத்தில் ஏலாக்குறிச்சி உள்ளது. இந்த நகரம், கொள்ளிடம் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர், திருவையாறு மற்றும் அரியலூர் இந்த கிராமம் அருகிலுள்ள நகரங்களாகும். இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

ஏலாக்குறிச்சி அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. அரியலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S Bro. K. Chinnappa அவர்களுக்காகவும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Thol. Thirumavalavan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பரிசுத்த கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

ஏலாக்குறிச்சி மக்களின் முக்கிய தொழிலானது விவசாயம் இங்கு விளைவிக்கப்படும் முக்கிய பயிர்கள் அரிசி மற்றும் கரும்பு ஆகும். இந்த நகரத்தின் முக்கிய தொழிலான விவசாயத்திற்காக ஜெபிப்போம். விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசங்களுக்காக ஜெபிப்போம்.

ஏலாக்குறிச்சி ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஏலாக்குறிச்சி ஊராட்சி மன்ற தொகுதிகளுக்காகவும், ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஏலாக்குறிச்சி ஊராட்சியில் 545 குடிநீர் இணைப்புகள், 3 சிறு மின்விசைக் குழாய்கள், 9 கைக்குழாய்கள், 9 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 31 உள்ளாட்சிக் கட்டடங்கள், 5 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 18 ஊரணிகள் அல்லது குளங்கள், 2 விளையாட்டு மையங்கள், 68 ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது.

ஏலாக்குறிச்சியில் மொத்த மக்கள் தொகை 6,008 ஆகும், இதில் ஆண் மக்கள் தொகை 3,049 ஆகவும், பெண் மக்கள் தொகை 2,959 ஆகவும் உள்ளது. ஏலக்குறிச்சி கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 66.91% ஆகும், இதில் 74.45% ஆண்கள் மற்றும் 59.14% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஏலக்குறிச்சி கிராமத்தில் 1,539 வீடுகள் உள்ளன. இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.