No products in the cart.
தினம் ஓர் ஊர் – எட்டிமடை (Ettimadai) – 26/11/24
தினம் ஓர் ஊர் – எட்டிமடை (Ettimadai)
மாவட்டம் – கோயம்புத்தூர்
மாநிலம் – தமிழ்நாடு
வட்டம் – மதுக்கரை
பரப்பளவு – 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi)
மக்கள் தொகை – 9,352
கல்வியறிவு – 71.84%
District Collector – Bro. Kranthi Kumar Pati I.A.S.
District Revenue Officer – Sis. M. Sharmila
Commissioner of Police – Bro. V. Balakrishnan I.P.S. (Coimbatore)
Commissioner Corporation of Coimbatore – Bro. Sivaguru Prabakaran I.A.S.
Revenue Divisional Officer – Bro. P.K. Govindan Coimbatore (North)
Revenue Divisional Officer – Bro. Pandarinathan Coimbatore (South)
மக்களவைத் தொகுதி – பொள்ளாச்சி
சட்டமன்றத் தொகுதி – கிணத்துக்கடவு
மக்களவை உறுப்பினர் – Bro. Eswaraswami (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Damodaran (MLA)
Municipal Commissioner – Bro. P. Pitchaimani (Madukkarai)
Chairman – Sis. Noorjahan (Madukkarai)
Vice – Chairman – Bro. Rameshkumar (Madukkarai)
Principal District Judge – Sis. G. Vijaya (Coimbatore)
District Munsif-Cum-Judicial Magistrate – Sis. T. Uma Maheswari (Madukkarai)
ஜெபிப்போம்
எட்டிமடை (Ettimadai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். புகழ்பெற்ற அமிர்தா பல்கலைக்கழக வளாகம் எட்டிமடையில் அமைந்துள்ளது. எட்டிமடை அதன் இயற்கைக்காட்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் காட்சிகளுக்கு பெயர் பெற்றது.
இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மதுக்கரை 8 கி.மீ.; மாவூத்தம்பட்டி 3 கி.மீ.; பூளுவப்பட்டி 8 கி.மீ.; பிச்சனூர் 3 கி.மீ. பாலக்காடு 40 கி.மீ தொலைவில் உள்ளன.
எட்டிமடை நகரம் 12 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியானது 16.44 ச.கி.மீ. பரப்பும், 59 தெருக்களும் கொண்டுள்ளது. எட்டிமடை பேரூராட்சியின் Municipal Commissioner Bro. P. Pitchaimani அவர்களுக்காகவும், Chairman Sis. Noorjahan அவர்களுக்காகவும், Vice – Chairman Bro. Rameshkumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Damodaran அவர்களுக்காகவும், பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் Bro. Eswaraswami அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
எட்டிமடை டவுன் பஞ்சாயத்தில் 9,352 மக்கள் தொகை உள்ளது, இதில் 4,676 ஆண்கள் மற்றும் 4,676 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 826 ஆகும். எட்டிமடை டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 2,564 வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. மக்கள்தொகையில் இந்து 93.49%, முஸ்லிம் 2.62% மற்றும் கிறிஸ்தவர்கள் 3.77% உள்ளனர்.
எட்டிமடையில் ஆண்களின் கல்வியறிவு 78.45% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 65.24% ஆகவும் உள்ளது. அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம், அதன் பள்ளிகள் மற்றும் அமிர்தா வித்யாலயம் சிபிஎஸ்இ பள்ளி ஆகியவை இங்கு அமைந்துள்ளது. வெங்கடேஷ்வரா வணிக மற்றும் கணினி பயன்பாடுகள் கல்லூரி, நேரு குழுமம் நிறுவனம், நாராயண குரு கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற பிற கல்லூரிகள் உள்ளன.
எட்டிமடை பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். எட்டிமடை பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். எட்டிமடை பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.