No products in the cart.

தினம் ஓர் ஊர் – இலால்குடி (Lalgudi) – 29/04/24
தினம் ஓர் ஊர் – இலால்குடி (Lalgudi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருச்சிராப்பள்ளி
மக்கள் தொகை – 254,865
கல்வியறிவு – 75.56%
மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்
சட்டமன்றத் தொகுதி – இலால்குடி
மாவட்ட ஆட்சியர் – Bro. Pradeep Kumar (I.A.S)
Commissioner of Police – Sis. N. Kamini (IPS)
Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)
District Revenue Officer – Sis. R. Rajalakshmi
Project Director – Bro. S. Devanathan
மக்களவை உறுப்பினர் – Bro. T. R. Paarivendhar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. Soundara Pandian (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. V. Kumar
நகராட்சி தலைவர் – P.Duraimanickam
நகராட்சி துணைதலைவர் – R. Suguna Rajmohan
Principal District Judge – Bro. K.Babu
Principal District Munsif – Bro. Thiru.S.Rajkumar (Lalgudi)
Additional District Munsif – Sis. M.Abinaya (Lalgudi)
Sub Judge – Bro. S.Vijayakumar (Lalgudi)
ஜெபிப்போம்
இலால்குடி (Lalgudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள, திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். . இலால்குடி என்ற சொல் இரண்டு சொற்களைக் கொண்டுள்ளது – லால் என்றால் “சிவப்பு” மற்றும் குடி என்றால் “கோபுரம்” என்று கூறப்படுகிறது.
இலால்குடி 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் வெளியிட்டது. நகராட்சி ஆணையர் Bro. V. Kumar அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் P.Duraimanickam அவர்களுக்காகவும், நகராட்சி துணைதலைவர் R. Suguna Rajmohan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இலால்குடி நகராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரம் இலால்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இலால்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A. Soundara Pandian அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. T. R. Paarivendhar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவ கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இலால்குடி வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 93 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் இலால்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் உள்ளன. இவ்வட்டத்தில் இலால்குடி நகராட்சி மற்றும் பூவாளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி ஆகிய நான்கு பேரூராட்சிகள் அமைந்துள்ளன. இந்த நகராட்சியில் உள்ள பேரூராட்சிகளுக்காகவும், வருவாய கிராமங்களுக்காகவும் ஜெபிப்போம்.
இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 254,865 ஆகும். இதில் ஆண்கள் 125,070 பேரும், பெண்கள் 129,795 பேரும் உள்ளனர். குடும்பங்கள் 67,722 வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் மொத்தம் 76.8% மக்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 78.39% பேரும், இசுலாமியர்கள் 3.31% பேரும், கிறித்தவர்கள் 18.19% பேரும் மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.13% பேரும் உள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
இலால்குடியை சுற்றிலும் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கும் பல கிராமங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் செய்யப்படும் அரிசி, வாழை, பயறு பயிர்கள் லால்குடி நகரின் முக்கிய பொருளாதாரத்தைப் பெறுகின்றன. லால்குடி தாலுகாவில் கொள்ளிடம், பெருவளை, ஐயன், பங்குனி, புள்ளம்பாடி ஆகியவை தாலுகாவை கடந்து செல்லும் முக்கியமான கால்வாய்கள். இந்த நீர்நிலைகளுக்காக ஜெபிப்போம். விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இலால்குடி மற்றும் மணச்சநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய லால்குடியின் கல்வி மாவட்டத்திற்கு லால்குடி நகரம் தலைமை தாங்குகிறது. அரசால் இயக்கப்படும் லால்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நிர்வாகத்தால் இயக்கப்படும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மணக்கால் டான் போஸ்கோ பள்ளி ஆகியவை கிராமப்புற ஆண்களும் பெண்களும் அதிகம் படிக்கும் முக்கியப் பள்ளிகளாகும். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இலால்குடி நகராட்சிக்காக ஜெபிப்போம். இலால்குடி நகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கிறிஸ்தவர்கள் குறைவாக உள்ள இந்த நகரத்திற்காக பாரப்பட்டு ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்படவும், இரட்சிப்படாத மக்கள் தொடப்படவும் ஜெபிப்போம்.